தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்வு!

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ஆக உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 59ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.