கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்!

உலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகப்படுத்தும் மருந்துகளே  தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல், ஊரடங்கு, தனிமைப்படுத்தல், சமூகப்பரவலை தடுத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா என்பது கோர நரசிம்மரின் அவதாரம் CORONA (RA) SIMMAR என்று பொருள்படும் வகையில், ஜோதிடர் நெல்லை வசந்தன் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மேலும், இதற்கு முந்தைய அவரது ஆய்வுகள் பலவற்றிலும், சூரியன்-செவ்வாய்-சனி ஆகிய கிரகங்கள் எந்த வகையில் சம்பந்தப்பட்டாலும், ஏதாவது ஒரு வகையில் இயற்கை பேரிடர் ஏற்படும் என்பதையும் கூறி இருக்கிறார்.

இதுதொடர்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர் வெளியிட்ட நூலிலும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

இந்த சூரியன்-செவ்வாய்-சனி சேர்க்கையானது, நரசிம்மரை குறிக்கும் என்றும் அவர் தமது நூலில் கூறி இருப்பார்.

இந்நிலையில், ஒட்டுமொத்த உலகத்தையே அச்சுறுத்தி வரும், கொரோனாவை கட்டுப்படுத்த, ஒரிஸ்ஸா மாநிலம், பூரி ஜெகநாதர் ஆலயத்தில், உள்ள நரசிம்மர் விக்ரகம் 115 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று வெளியில் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் 1905 ம் பிளேக் தோற்று நோய் பெருமளவில் பரவி, உயிரிழப்புகளை ஏற்படுத்திய பொது, இதே பூரி நரசிம்மர் விக்ரகம் வெளியில் கொண்டு வரப்பட்டு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.

கொரோனா என்றாலே கோர-நரசிம்மர் என்று, நெல்லை வசந்தன் பதிவுகள் வெளியாகிய அதே நாளில், பூரி ஜெகநாதர் ஆலயத்தில் 115 ஆண்டுகளுக்கு பிறகு, நரசிம்மர் சிலை வெளியே எடுக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. (லிங்க் இணைக்கப்பட்டுள்ளது)

https://www.ashtarcommandcrew.net/forum/topics/just-don-t-mess-about-deity-of-lord-narasimha-at-puri jagannath?page=1&commentId=2859786%3AComment%3A3210355&x=1&fbclid=IwAR1vkEY96_geKCvDIRyobJn_4LPFzhg7SHxN9iwGxv2Da83qT7U_jrDmILM#2859786Comment3210355