ராகு – சனி சேர்க்கை திடீர் அதிர்ஷ்டத்தை வழங்குமா?

குறுக்கு வழியில் குறுகிய காலத்தில் முன்னேற்றத்தை தரும் சூதாட்டம் போன்ற வாழ்க்கைக்கு சொந்தக்காரன் ராகு.

தாமதமாக, அதே வேளையில்,  நிதானமான நீடித்த, நிலைத்த முன்னேற்றத்திற்கு வழி வகுப்பவர் சனி.

இந்த இருவரின் சேர்க்கை என்பது, யாரும் எதிர்பார்க்காத வகையில், குறுகிய காலத்தில்  மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்து, அதைவிட கூடுதல் வேகத்தில் சரிவையும் கொடுத்துவிடும் அமைப்பாகும்.

கோச்சாரத்தில், ராகுவை சனி நெருங்கும்போது, சில அபரிமிதமான முன்னேற்றத்தை அளிக்கும் வாய்ப்புகளை கொடுப்பார்.

அதை மிகவும் கவனமாக கையாண்டால், வெற்றிக்கான அடித்தளம் அமைந்து விடும். ஆனால், அந்த நேரத்தில் மற்றவர்களின் அறிவுரைகள் எடுபடாது.

நல்ல முன்னேற்றத்தை அடைய, குறுக்கு வழிகளை தேர்வும் செய்யும் மன நிலையை தந்து விடும். ஆரம்பத்தில் நல்ல பலன் கிடைத்தாலும், முடிவு நெகடிவாக அமைந்துவிடும். விபத்துக்கள், வழக்குகள், சண்டை சச்சரவுகள் போன்றவற்றிலும் கொண்டுவந்து நிறுத்திவிடும்.

சனி- ராகு சேர்க்கையின், சுப பலன்கள் முழுமையாக கிடைக்கவும், கெடுபலன்கள் குறையவும் சனிக்கிழமை ராகு கால வேளைகளில் கால பைரவரை வணங்குவது நல்லது.