சூரியன் சனி சேர்க்கை நெருக்கடியை தருமா?

கோச்சார சனி, ஜென்ம ஜாதகத்தில் ஒரு கிரகத்துடன் சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோ என்ன பலன்? என்பதை பார்ப்போம்.

இதில் உள்ள கிரக சேர்க்கை காரகத்துவங்கள் சிலவற்றை, ஜென்ம ஜாதக பலன்களுக்கும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

சூரியன் ஒளியை வழங்கும் கிரகம். சனி இருளை வழங்கும் கிரகம். இதில் இருந்தே இவ்விரு கிரகங்களின் தன்மை முரண்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அதனால், இந்த சேர்க்கையானது பல் வலி, பல் பிரச்சினை, , தலை வலி, இருதய நோய், முடி உதிர்தல், கண் பிரச்சினை, விபத்து, எலும்பு முறிவு போன்றவற்றை உருவாக்கும்.

சிலருக்கு பல் மற்றும் இருதய சம்பந்தமான மருத்துவ படிப்புகளை படிப்பதற்கான வாய்ப்புகளும் அமையும்.

சூரியன் சனி சேர்க்கை மற்றும் பார்வையானது, வேலை மற்றும் தொழிலில் பாதிப்பை உருவாக்கும். இந்த சேர்க்கையை சர்வீஸ் கட் (Service Cut)அமைப்பு என்றும் சொல்வார்கள்.

ஜென்ம ஜாதகத்தில் சூரியன் – சனி பார்வை, சேர்க்கை உள்ளவர்கள், தொடர்ந்து ஒரு வேலையிலோ, தொழிலிலோ நீடிக்க முடியாது என்பதை அனுபவத்தில் உணரலாம்.

இதை எல்லாம் விட்டு விட்டு சூரியன் – சனி சேர்க்கை என்றால், அப்பா பிள்ளை உறவில் விரிசல் என்ற, ஒற்றை பழைய பல்லவியையே பாடிக்கொண்டு இருக்க கூடாது.

உங்கள் லக்னத்திற்கு சூரியன் எந்த பாவத்திற்கு அதிபதியாக வருகிறாரோ, அந்த பாவத்தில் ஒரு முக்கிய பாதிப்பை ஏற்படுத்திய பின்னரே, சனி பகவான் கொஞ்சம் அமைதி அடைவார்.

இதில் சொல்லப்பட்டவை, ஒரு சில அடிப்படை விஷயங்கள் மட்டுமே. உங்கள் அனுபவத்தில் இன்னும் பலவற்றை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

சூரியன் – சனி சேர்க்கை அல்லது பார்வையால் விளையும் தடைகள் அகல, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சரபேஸ்வரர் வழிபாடு சிறந்தது.

மேலும் எந்த ராசியில், சனி பகவான் அமர்ந்துள்ளார், எந்தெந்த கிரகத்துடன் இணைந்துள்ளார் என்பதை அறிந்து, அந்த ராசிக்கு உரிய இடத்தில் (ஊர்கள்) அமைந்துள்ள பரிகார கடவுள்களை வணங்குதல் நன்மை பயக்கும்.