செவ்வாய் – சனி சேர்க்கை இருந்தால் பொறியியல் படிக்க முடியுமா?

செவ்வாய் – சனி சேர்க்கை எதிரெதிர் தன்மை கொண்ட இரு கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை.

செவ்வாய் நெருப்பு என்றால், சனி ஐஸ் கட்டி. அதனால், கோச்சார சனி, ஜென்ம ஜாதகத்தில் உள்ள செவ்வாயை பார்க்கும்போதோ, சேரும்போதோ எதிர்மறையான பலன்களே அதிக அளவில் நடக்கும். சில நல்ல பலன்களும் கிடைக்கும்.

உடைத்தல், வெட்டுதல், ஒட்டுதல் போன்றவற்றை செய்யும், என்ஜினியரிங் படிப்பு மற்றும் பணியை கூறுவது சனி செவ்வாய் கூட்டணியாகும்.

அதனால், வீடுகளை இடித்து கட்டுவார்கள், இல்லை எனில் அருகாமையில் வீடுகள் அல்லது கட்டிடம் இடிக்கும் சப்தம், இடிந்து விழும் சப்தம், வெடி அல்லது வேட்டு சப்தம், இடிவிழும் சப்தம் போன்றவை காதில் விழும்.

மாணவர்களுக்கு இன்ஜினியரிங் சீட் கிடைக்கும். படிப்பு முடித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு காவல்துறை மற்றும் ராணுவத்துறையில் வேலை கிடைக்கும்.

சிலர் காவல் நிலையத்திற்கு சென்று வரவும் நேரும். மின்சாரம்- ஒயர்கள் சம்பந்தப்பட்ட, பணிகள் நடக்கும்.

விபத்து, காயம்படுதல், எலும்பு முறிதல், அறுவை சிகிச்சை போன்றவையும் இந்த காலகட்டத்தில் நடைபெறும். சகோதரர்களிடம் சில நேரங்களில் கருத்து வேறுபாடு ஏற்படும்.

ஜென்ம ஜாதகத்தில், செவ்வாய் எந்தெந்த பாவங்களுக்கு காரகத்துவம் வகிக்கிறதோ, அந்த பாவங்களில் ஒரு பாதிப்பை ஏற்படுத்திய பின்னர், சனி அமைதி ஆவார்.

சனி – செவ்வாய் தாக்கத்தில் இருந்து விடுபட, சுப்ரமணியர், மணிகண்டன் அல்லது நரசிம்மரை, செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் வழிபடுவது நல்லது.

மேலும் கோச்சார சனி அமர்ந்த ராசி, எந்த ஊரில் வருகிறதோ, அந்த ஊரில் உள்ள பரிகார கடவுள்களை வழிபடுவதும் நல்லது.