குரு – சனி சேர்க்கை சொத்து ஆவணங்களில் வில்லங்கம் ஏற்படுத்துமா?

குரு – சனி தொடர்பை சண்டாள தோஷம் அல்லது பிரம்மஹத்தி தோஷம் என்று சொல்வார்கள். இதை ஏற்றாலும், மறுத்தாலும் பலன் மாறப்போவதில்லை.

குரு அந்தணன், அழகன், சனியோ நேர் எதிரான தன்மை கொண்டது. கீழ்நிலையில் உள்ள மக்களுக்குதான், ஜாதகத்தில் இந்த தொடர்பு  இருக்கும் என்று சொல்ல கூடாது. அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும்.

அவரவர் நிலைக்கு ஏற்ப, குரு-சனி தொடர்பு செயல்படும். எந்த இடத்தில் இருந்தாலும், மனம் நல்லவரையோ, நல்ல சிந்தனைகளையோ நாடாது.

புகழின் உச்சியில், நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களை, மட்டம் தட்டி பேசுதல், உயர்ந்த படைப்பை தேவையே இல்லாமல் விமர்சித்தல் போன்றவையும் சண்டாள யோகத்தின் ஒரு அம்சமே.

கோச்சாரத்தை பொறுத்தவரை, குருவுடன் சனிக்கு தொடர்பு ஏற்பட்டால், வீடு கட்டுதல், மனை வாங்குதல் போன்றவை நடக்கும். அதற்காக ஆவணங்களை அடமானம் வைத்து கடன் வாங்குவதும் உண்டு.

வீடு, மனை மற்றும் ஆவணங்களில் சில சிக்கல்கள், லிடிகேஷன்கள் ஏற்படலாம். எனவே, ஆவணங்களை வழக்கறிஞர், ஆடிட்டர் போன்ற  தகுந்த நபர்களிடம் கொடுத்து, உரிய ஆலோசனைகளை பெற்ற பின்னரே வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் வேண்டும்.

இந்த கால கட்டத்தில் நிர்வாக இயல் சம்பந்தப்பட்ட எம்.பி.ஏ, மார்கெட்டிங் போன்ற கல்விகள் பயில வாய்ப்புகள் ஏற்படும்.

குரு சனி சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள், சிவில் வழக்குகளில் திறமையாக வாதாடுவார்கள். இவர்களுடன், புதனும் சம்பந்தப்பட்டால், நீதிபதி ஆவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.

குரு – சனி தொடர்பான சுப பலன்களை அடையவும், அசுப பலன்களில் இருந்து விடுபடவும், மீனாட்சி சுந்தரேஸ்வரரை, வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் வழிபடலாம்.