தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா? முதல்வரின் அறிவிப்பு இன்று வெளியாகும்!

– இரண்டு நிமிட வாசிப்பு

மக்கள் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, இன்று முதல், சில அத்தியாவசிய தொழில்களுக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

அதன்படி சில நிபந்தனைகளுடன் சில தொழில்கள் மற்றும் பணிகளை தொடரலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

ஆனாலும், இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகளே சில நிபந்தனைகளுடன் முடிவு செய்ய வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு குறித்து ஆலோசிக்க, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, முதல்வருக்கு இன்று தனது பரிந்துரையை வழங்க உள்ளது.

இதையடுத்து, ஊரடங்கில் எந்தெந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.