தூக்கத்தில் நடக்க வைக்கும் நட்சத்திரங்கள்!

சிலர் தூக்கத்தில் நடப்பார்கள். சிலர் தூங்கும்போது எதையாவது உளறுவார்கள். சிலர் திடீரென யாரோ அழைத்தது போல எழுந்து, ஒரு வேலையை செய்துவிட்டு மீண்டும் படுத்துக்கொள்வார்கள். சிலர் யாரோ அருகில் உள்ளவர்களிடம் பேசுவது போல, தனியாக பேசிக்கொண்டு இருப்பார்கள்.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது நமக்கு சிரிப்புதான் வரும். ஆனால், அவர்களுக்கு அது தெரியாது. நடந்ததை சொன்னால், சிலர் நம்மோடு சேர்ந்து சிரிப்பார்கள். சிலர் வெட்கப்படுவார்கள்.

ஒரு சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களிடம் இதுபோன்ற குணங்கள்   இருப்பதாக ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன் கூறுகிறார்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் புதனுக்கு உரிய நட்சத்திரங்களாகும், இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சிலர் தூக்கத்தில் பேசுவார்கள். அதேபோல், தூக்கத்தில் நடப்பார்கள்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற சனியின் நட்சத்திரத்தில் பிறந்த சிலர், தூக்கத்தில் இருந்து திடீன்னு எழுந்து, எதையாவது உளறுவார்கள். பிறகு மீண்டும் படுத்துக்கொள்வார்கள்.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் போன்ற சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்து, யாரோ சொன்னதை செய்வது போல, தாழ்ப்பாள் போடுவது, லைட்டை ஆப் பண்ணுவது போன்றவற்றை செய்து விட்டு மீண்டும் படுத்துக் கொள்வார்கள்.

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் போன்ற செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவ சிலர், தனிமையில் இருக்கும்போது கூட, யாருடனோ பேசுவது போல, தனியாக பேசிக்கொண்டு இருப்பார்கள். சில நேரங்களில் இது ஒத்திகை பார்ப்பது போல இருக்கும்.