தர்பார்: சினிமா விமர்சனம்!

மும்பையில் 17 போலீசாரை ஒரு வீட்டில் வைத்து எரித்து கொன்று தப்பி சென்று விடுகிறான் போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்த தாதா ஒருவன். அதனால், போலீசார் மீதே நம்பிக்கையை இழக்கின்றனர் பொது மக்கள்.

அதன் காரணமாக, தமது மகளுடன் மும்பை  போலீஸ் கமிஷனராக வருகிறார் ரஜினிகாந்த். அவர் பதவி ஏற்பதற்கு முன்பாகவே, துணை முதல்வர் மகள் உள்பட மூன்று இளம்பெண்களை, போதை பொருள் கடத்தி கும்பலை சேர்ந்தவனின் மகன்.

அந்த பெண்களை இரண்டு மணி நேரத்துக்குள் மீட்கும் ரஜினி, அதை வெளியில் காட்டாமல், மும்பை மற்றும் அதை ஒட்டியுள்ள பேரு நகரங்களில் உள்ள, சட்ட விரோத கும்பல்களை எல்லாம் களை எடுக்கிறார்.

அதனால், அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கிறது. துணை முதல்வர் மகளை கடத்திய போதை பொருள் கும்பலின் தலைவனுடைய மகனையும் சுட்டுக்கொல்ல வேண்டிய நிலை வருகிறது.

அதற்காக பழி வாங்க வரும் வில்லன் சுனில் ஷெட்டி, ரஜினியையும், அவர் மகளையும் சார் விபத்தில் சிக்க வைத்து, மகளை கொள்ளுகிறார்.

ரஜினி விபத்தில் சில மணி நேரம் நினைவு இழக்கும்போது, அவர் மகள் உயிரிழக்கிறார்.அதன் பிறகு வில்லனை தேடிப்பிடித்து, ரஜினி கொல்வதுதான் மீதி கதை.

இயக்குனர் முருகதாஸ், தனது ஒவ்வொரு படத்திலும், வைக்கும் காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை ஒன்றிப்போக வைக்கும். இதில் அப்படிப்பட்ட காட்சிகள் பெரிதாக இல்லை.

ரஜினி மகளாக நடிக்கும் நிவேதா தாமஸ், சில காட்சிகளில் அப்பா – மகள் சென்டிமெண்டில் உருக வைக்கிறார். ரஜினியில் கூடவே வரும் யோகி பாபுவின் காமெடியும் ஒகே. நயன்தாரா கதாநாயகி என்ற பெயருடன் வந்து போகிறார்.

படம் வேகமாக நகர்கிறதா அல்லது மெதுவாக நகர்கிறதா என்று தெரியவில்லை. செண்டிமெண்ட் காட்சிகள் எதுவும் அழுத்தமாக இல்லை.

மகளின் இறப்பால் தவிக்கும் ரஜினி, தனியாக சென்று பலரை சுட்டுக்கொல்வது என பல லாஜிக் இல்லாத காட்சிகள் அதிகம் உள்ளன. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்கும்.

ரயில் நிலையத்தில் இடம்பெறும் சண்டை காட்சி நன்றாகவே உள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், சுனில் ஷெட்டியுடன் மோதும் காட்சிகள், அருமையாக படமாக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் தர்பார் ஓரளவு ரஜினி பார்முலா படமாக உள்ளது. முருகதாசுக்கான ஸ்பெஷாலிட்டி எதுவும் இல்லை.