பாரத ஸ்டேட் வங்கியில் 8 ஆயிரம் பணியிடங்கள்: டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் கிளரிக்கல் எனப்படும் ஜூனியர் அசோசியேட்ஸ் பணிக்கான 8 ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான, தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஜனவரி 26- ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை ஜனவரி 26-ம் தேதி வரை ஆன்லைனில் செலுத்தலாம்.

பிப்ரவரி 11-ம் தேதி முதல்நிலைத் தேர்வும், ஏப்ரல் 2-வது வாரத்தில் முதன்மைத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம். அல்லது 01.01.2000  தேதிக்கு முன்னும், 02.01.1992-க்குப் பின்னும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

தொடக்க ஊதியமாக குறைந்தபட்சமாக, குறைந்தபட்சம் ரூ.13 ஆயிரத்து 75 முதல் அதிகபட்சமாக ரூ.31 ஆயிரத்து 450 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. பொது மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குத் தேர்வுக் கட்டணமாக ரூ.750/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செலுத்திய தேர்வுக் கட்டணத்தை திரும்பப் பெற இயலாது. ஆன்லைனில் மட்டுமே தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த முடியும்.

குறைந்தபட்ச கல்வித் தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி அவசியம். கடைசி வருடம் கல்லூரியில் படிப்பவர்களும் இத்தேர்வு எழுதத் தகுதியானவர்கள்

இத்தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும்.

முதல்நிலைத் தேர்வானது மூன்று பிரிவுகளின் கீழ், 100 கேள்விகள், 100 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும். இத்தேர்வு ஒரு மணிநேரத்தில் முடிவடையும்.

முதன்மைத் தேர்வானது நான்கு பிரிவுகளின் கீழ் 190 கேள்விகள்,  200 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும். இத்தேர்வு 2  மணிநேரம் 40 நிமிடங்களுக்கு நடைபெறும். தவறான மதிப்பெண்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணபிக்க முடியும். ஆன்லைனில் www.sbi.co.in/careers/ongoing-recruitment.html – என்ற இணையதள முகவரிக்குச் சென்று தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும்,https://ibpsonline.ibps.in/sbijassdec19/,https://www.sbi.co.in/web/careers/current-openings ஆகிய இணைப்புகள் மூலம் மேலும் விவரங்களை அறியலாம்.