அசுரன் படத்தின்  வெற்றியால் இ-புக் விற்பனையில் வெக்கை நாவல் முதலிடம்!

அசுரன்’ படத்தின் வெற்றியால்  2019-ம் ஆண்டு இந்தியளவில் இ-புக் விற்பனையில் ‘வெக்கை’ நாவல் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் அசுரன். இந்தப்படம் பல தரப்பினரின் பாராட்டை பெற்றதுடன் வசூலிலும் நூறு கோடி ரூபாயை ஈட்டி சாதனை படைத்தது.

எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’  என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானதே அசுரன் படம் அசுரன்  வெற்றியால் அதன் தெலுங்கு ரீமேக் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், அமேசான் இணையத்தின் இ-புக் விற்பனையில், பூமணி எழுதிய ‘வெக்கை’  நாவல், இந்தியாவிலேயே அதிக அளவில் விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது.

அசுரன்  படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்த நாவலை எப்படி படமாக்கியிருக்கிறார்? எனப் பலரும் தரவிறக்கம் செய்து படித்திருப்பதை இந்த விற்பனைக் காட்டுகிறது.

இந்தத் தகவல் அமேசான் கிண்ட்லே  இந்தியா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சாதனை, அசுரன் படக்குழுவினருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.