ஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது!

தனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை இருப்பதால், அதற்கான நிவாரண மகா ஹோமம் சென்னை மைலாப்பூரில் உள்ள, மாதவ பெருமாள் ஆலய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஹோமத்தில் பல்வேறு சிவாச்சாரியர்கள் கலந்து கொண்டு ஹோமத்தை நடத்தினர்.

தனுசு ராசியில், சூரியன், சந்திரன், குரு, சனி, கேது, புதன் ஆகிய ஆறு கிரகங்கள் ஒன்று சேர்ந்துள்ளன.

இதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வண்ணம் இந்த மகா ஹோமம் நடைபெற்றது.

காலை ஆறு மணிக்கு தொடங்கிய ஹோமம் நண்பகல் பனிரண்டு மணி வரை நடைபெற்றது.

இதில் நடிகர் எஸ்.வி.சேகர், மனோபாலா, டி.வி.வரதராஜன், முன்னணி ஜோதிடர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.