2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்:  கன்னி லக்னம்!  

கவர்ச்சியாலும்  சாதுரியத்தாலும் மற்றவர்களை வசீகரிக்கும் கன்னி லக்ன நேயர்களுக்கு வணக்கம். ஆங்கில புத்தாண்டான 2020ம் ஆண்டு, கன்னி லக்ன காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

கன்னி லக்ன காரர்களுக்கு இந்த ஆங்கில புத்தாண்டு, ஆரம்பத்தில் சில நெருக்கடிகளை கொடுத்தாலும், போகப்போக நல்ல பலன்களையே கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

கடந்த சில வருடங்களாக, குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் கூட செலுத்த முடியாத பெற்றோர்கள், இனி அந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வந்து, பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்க நினைத்த அனைத்தையும் வாங்கி கொடுப்பார்கள்.

மருத்துவ செலவு செய்தும், பெண் பிள்ளைகள் ருது ஆகாமல் இருந்தால், அவர்கள் இந்த ஆண்டு ருதுவாகி குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு வழி வகுப்பார்கள்.

ஏற்கனவே ஒரு தொழில் செய்பவர்கள் அல்லது ஒரு பணியில் இருப்பவர்கள், அத்துடன் மற்றொரு வேலை அல்லது தொழிலை செய்து, கூடுதலாக வருமானம் ஈட்ட வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை சற்று பண நெருக்கடி அதிகமாக இருக்கும். எனினும், அதற்குப்பின், நெருக்கடிகள் அகன்று, பணப்புழக்கம் தாராளமாகும்.

வீட்டை விற்பனை செய்தவர்கள், அடமானம் வைத்தவர்கள், அவற்றை மீட்டு  மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப, தற்போது குடியிருக்கும் வீட்டை மாற்றி வேறு இடத்திற்கு குடி பெயர்வது நல்லது.

சகோதர வழிகளில் சில சச்சரவுகள் வரும். அதை பெரிது பண்ணாமல் சுமூகமாக தீர்த்துக் கொள்ளவும்.

பணத்தேவை வரும்போது, எந்தவித கௌரவமும் பார்க்காமல், சகோதர சகோதரிகளை நாடினால் மட்டுமே பண உதவி கிடைக்கும்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள், தங்களது நெருக்கடி மற்றும் பிரச்சினைகளில் இருந்து விடுபட, ஆடு வளர்த்து அதற்கு தினமும் அருகம் புல் வழங்குவது நல்லது.

ஆடு வளர்க்க முடியாதவர்கள், குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திற்கு ஆடு ஒன்றை வாங்கி நேர்ந்து விடலாம்.

இவை அனைத்தும், கன்னி லக்ன காரர்களுக்கான பொதுவான புத்தாண்டு பலன்கள் ஆகும். அவரவர் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் திசா புத்திகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.

என்ன நேயர்களே, கன்னி லக்னத்திற்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொண்டால் மட்டும் போதுமா? மற்ற ராசிகளுக்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொள்ள விர்கோ நியூஸ் இணைய தளத்தை பாருங்கள்.

இந்த பலன்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால், லைக் செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். மறக்காமல் விர்கோ நியூஸ் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள் நன்றி. வணக்கம்.