2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: ரிஷப லக்னம்!

உழைப்புக்கும், கவர்ச்சிக்கும் அடையாளமாக திகழும் ரிஷப லக்ன  நேயர்களுக்கு வணக்கம். ஆங்கில புத்தாண்டான 2020ம் ஆண்டு, ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

இந்த புத்தாண்டில், மனைவி வழியில் சொத்துக்கள் மற்றும் வருவாய் கிடைக்கும்.

உங்கள் பெண் குழந்தைகள் இதுவரை வயதுக்கு வராமல் இருந்தால், இந்த ஆண்டு அவர்கள் வயதுக்கு வருவார்கள்.

பிள்ளைகளின் படிப்புக்கும், அவர்களுக்கும் தேவையான செலவுகளை செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்ட நீங்கள், இனி அதை தாராளமாக செய்யும் அளவுக்கு உங்களுக்கு பணம் வந்து சேரும்.

கண் பிரச்சினை உள்ளவர்கள் அதில் இருந்து குணமடைவார்கள். அதிக நேரம் தொலைகாட்சி பார்த்தல் மற்றும் செல்பேசியில் செலவிடுதலை தவிர்த்தால் நல்லது.

கூட்டு தொழில் மற்றும் வியாபாரத்தில் இந்த ஆண்டு நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் அடைவீர்கள்.

இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள், மீண்டும் பழைய பாசத்துடன் நெருங்கி வருவார்கள். அவர்களை விட்டு சற்று விலகியே இருப்பது நல்லது.

குறிப்பாக, வேலை மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு, அவர்கள் புதுப்புது ஐடியாக்களை கொடுத்து, சிக்கலில் மாட்டிவிடுவார்கள். இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

தாயாரை மனம் கோணாமல், நடத்தும் ரிஷப லக்னகாரர்களுக்கு இந்த ஆண்டு நல்ல முன்னேற்றம் தரும் ஆண்டாக அமையும்.

மூதாதையர்களுக்கு திதி கொடுப்பதை மறந்தவர்கள் இந்த ஆண்டு கண்டிப்பாக திதி கொடுக்க வேண்டும். குறிப்பாக தாயாரை இழந்தவர்கள், கண்டிப்பாக தாயாருக்கு திதி கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே நெருக்கடிகள் தீரும்.

செய்யும் வேலை அல்லது தொழிலில் புதுப்புது சிந்தனைகளும், மாற வேண்டும் என்ற எண்ணங்களும் மனதில் அடிக்கடி தோன்றும். அவசரப்பட்டு முடிவெடுக்காமல், சூழ்நிலையை அனுசரித்து, கவனமாக முடிவெடுத்தால் நல்ல பலன் தரும்.

பெண்கள் விஷயத்தில் கெட்ட பெயர் ஏற்படும் நிலை வரும். எனவே, கவனமாக நடந்து கொள்ளவும். மாமனார் வழியில் சில விரிசல் ஏற்படும். அதை பெரிது படுத்தாமல், சுமூகமாக தீர்த்துக்கொள்வது நல்லது.

ரிஷப லக்ன காரர்கள், இந்த ஆண்டு உங்களது நெருக்கடிகளை அகற்றவும்,  யோகங்களை பெருக்கிக் கொள்ளவும், தாயாரிடம் அடிக்கடி தங்க நாணயங்களை கொடுத்து, வாங்கிக் கொள்வதை தொடர்ந்து செய்து வரவேண்டும்.

தாயார் இல்லாதவர்கள், தாயின் வயதில் இருக்கும் ஆதரவற்ற பெண்களுக்கு நாணயங்களை இலவசமாக கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வது நல்லது.

இவை அனைத்தும், ரிஷப லக்ன காரர்களுக்கான பொதுவான புத்தாண்டு பலன்கள் ஆகும். அவரவர் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் திசா புத்திகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.

என்ன நேயர்களே, ரிஷப லக்னத்திரற்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொண்டால் மட்டும் போதுமா? மற்ற ராசிகளுக்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொள்ள விர்கோ நியூஸ் இணைய தளத்தை பாருங்கள்.

இந்த பலன்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால், லைக் செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். மறக்காமல் விர்கோ நியூஸ் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள் நன்றி. வணக்கம்.