2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்:  விருச்சிக லக்னம்!

ஆராய்ச்சியிலும், ரகசியத்தை காப்பதிலும் தனி முத்திரை பதிக்கும்  விருச்சிக லக்ன நேயர்களுக்கு வணக்கம். ஆங்கில புத்தாண்டான 2020ம் ஆண்டு, உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  நல்ல அதிர்ஷ்டம் தரும் ஆண்டாகவே அமைந்துள்ளது.

எனினும் முடிந்தவரை, கோபப்படாமல் அனுசரித்து செல்பவர்கள் மட்டுமே பலன்களை முழுமையாக அனுபவிக்க முடியும்.

நீண்ட காலமாக யோசித்து, யோசித்து முடியாமல் போன காரியங்கள் அனைத்தும் இந்த ஆண்டில் வெற்றிகரமாக நடக்கும்.

ஆண்டின் தொடக்கத்திலேயே தொழிலில் பண வரவு அதிகரித்து பூரிப்பு அடைய போகிறீர்கள். பணமும் பொருளும் அபரிமிதமாக இருப்பதை கண்டு ஆனந்தம் அடையப்போகிரீர்கள்.

குடும்ப உறவுகளில் யாராவது பிரிந்து சென்று இருந்தால், அவர்கள் மீண்டும் வந்து சேர்ந்து உங்கள் மகிழ்ச்சியை அதிகப்படுத்துவார்கள்.

உங்களுக்கு அதிகம் பிடித்த, அதிக நெருக்கமானவர்கள் சிலர் உங்களை விட்டு பிரிந்து செல்ல நேரும். அது உங்களுக்கு நல்லது. அப்போதுதான் உங்களுக்கு வளர்ச்சிக்கான புதிய பாதைகள் துல்லியமாக புலப்படும். முன்னேற்றமும் கிட்டும்.

அறக்கட்டளை பணிகள், கட்டுமானப்பணிகள் என கைவிடப்பட்ட தொழில் அல்லது சேவைகளை தொடர, புதிய நபர் வந்து உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார். அவர் வேற்று மதம் அல்லது வேற்று மொழி பேசுபவராகவும் இருக்கலாம்.

விருச்சிக லக்னத்தில் பிறந்த தாத்தா பாட்டிகளுக்கு, பேரப்பிள்ளைகள் இல்லாமல் இருந்தால், இந்த ஆண்டு பேரப்பிள்ளைகள் பிறந்து உங்களை ஆனந்தத்தில் திளைக்க வைப்பார்கள்.

தாயாரின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படும். அவற்றை முன்கூட்டியே அறிந்து தகுந்த மருத்துவ சிகிச்சை அளிப்பது நல்லது.

பல பேருக்கு திருமணம் நடக்கும். மாற்று இனம், மதத்தில் திருமணங்கள் நடக்க அதிக வாய்ப்பு உண்டு.

பெண் வரவும் கிடைக்கும், பொன் வரவும் கிடைக்கும். இதில் பொன் வரவை மட்டுமே தேர்வு செய்பவர்கள், வீடு கட்டுதல் போன்ற எதிர்கால திட்டங்களில் வெற்றி அடைவார்கள். எனவே, ஏதாவது ஒன்றையே தேர்வு செய்ய வேண்டும்.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் தங்களது துணைவர் அல்லது துணைவியுடன் அதிக நெருக்கம் காட்ட வேண்டும். அவ்வாறு இருந்தால் அதற்கு ஏற்ப யோகங்கள் பெருகும்.

வீடு மற்றும் இடம் மாற்ற சிந்தனைகள், வேலை மாற்றும் சிந்தனைகள் இருந்தால், ஒரு வருடத்திற்கு அதை ஒத்திபோடுவது நல்லது. மாற்றம் நல்ல பலனை தராது.

அரசியலில் கீழ் நிலையில் இருந்த பலர், இந்த ஆண்டு, உயர்ந்த பதவிகளில் அமருவார்கள். அரசியலில் எதிர்பாராத வகையில் முன்னேற்றம் இருக்கும்.

வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்கள், ரசீதுகள், சாவி போன்றவற்றுக்கு மாற்று ஏற்பாடுகள், நகல்கள் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் அவற்றை வைத்த இடத்தை மறந்து தேடும் நிலை உருவாகும். அதனால், குடும்பத்தில் சில சச்சரவுகளும் உருவாகும். கவனம் தேவை.

வெளியூர், வெளிநாட்டு சுற்றுலா பயணங்கள் அமைந்தால் முடிந்தவரை இந்தாண்டு தவிர்க்கவும். தவிர்க்க முடியாத நிலை வந்தால், மிகவும் கவனமாக சென்று வரவும். உல்லாச ஈடுபாடுகளை பயணத்தின்போது முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

விருச்சிக லக்னத்திற்கு இந்த ஆண்டு முழுவதுமே நல்ல பலன்களாக நடக்கும். அந்த பலன்களை முறையாக பயன்படுத்திக் கொள்ள, மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்திற்கு சென்று புனித நீராடினால் மிகவும் நல்லது.

இவை அனைத்தும், விருச்சிக லக்ன காரர்களுக்கான பொதுவான புத்தாண்டு பலன்கள் ஆகும். அவரவர் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் திசா புத்திகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.

என்ன நேயர்களே, விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொண்டால் மட்டும் போதுமா? மற்ற ராசிகளுக்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொள்ள விர்கோ நியூஸ் இணைய தளத்தை பாருங்கள்.

இந்த பலன்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால், லைக் செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். மறக்காமல் விர்கோ நியூஸ் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள் நன்றி. வணக்கம்.