2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்:  மீன லக்னம்!  

எந்த கெட்ட பெயரும் வராமல் எதையும் நேர்த்தியாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மீன லக்ன நேயர்களுக்கு வணக்கம்.

ஆங்கில புத்தாண்டான 2020ம் ஆண்டு, உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

மீன லக்ன காரர்களுக்கு, இந்த புத்தாண்டு, அனைத்து வகையிலும் மன மகிழ்ச்சி தரும் பல நல்ல பலன்களை வழங்கப்போகிறது.

கடந்த பதினான்கு வருடங்களாக, பல காரணங்களால் உங்களை விட்டு பிரிந்து இருந்த பல சொந்தங்கள், நட்புகள் மீண்டும் உங்களோடு சேருவார்கள்.

அதன்மூலம் உங்களுடைய அந்தஸ்து உயரும். எனினும் அதிகம் பூசிக்கொள்ளாமல், முடிந்த அளவு ஒரு இடைவெளி இருப்பது நல்லது.

புதிதாக வங்கி கணக்கு தொடங்குவது நல்லது. ஏற்கனவே வங்கி கணக்கு இருந்தாலும், புதிதாக மற்றொரு வங்கியில் ஒரு கணக்கை தொடங்கலாம். அதுபோல, மணி பர்சை சுத்தமாக துடைக்காமல், கொஞ்சம் பணத்தை வைத்துக் கொள்ளவும். அப்போதுதான் பணம் தொடர்ந்து சேரும்.

கணினி மற்றும் மென்பொருள் சார்ந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கு, இந்த ஆண்டு வேலை மாற்றம் அமையும். அப்படி அமையும்போது, குடும்பத்தையும் கூடவே கூட்டிச் செல்வது நல்லது.

வேலை வேலை என்று முழு கவனத்தையும் செலுத்தாமல் குடும்பத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம்.

உங்கள் பிள்ளைகள் வெளிநாடு சென்று வருவார்கள். அது உங்களுக்கு மன மகிழ்ச்சியை தரும் விதத்தில் இருக்கும்.

இந்த ஆண்டு உங்கள் வேலை மற்றும் தொழிலை மேம்படுத்தும் வகையில் ஒரு நல்ல ஆலோசகர் வந்து சேருவார். அவர் மூலம் உங்களுக்கு முன்னேற்றம் அமையும்.

வாகனங்களில் பயணம் செய்யும்போது சற்று எச்சரிக்கையாக இருக்கவும். அதேபோல், வாகனங்களை மற்றவர்களுக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது.

சதுரங்க வேட்டை போல திடீர் என்று பணக்காரர் ஆவதற்கு வழிகாட்டுவது போல சிலர் வருவார்கள். தவறாக வழிகாட்டி சிக்கலை ஏற்படுத்தி விடுவார்கள். எனவே, அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். திடீர் அதிர்ஷ்டத்தை நம்பக்கூடாது.

மற்றவர்கள் பணத்தையோ, பொருளையோ நீங்கள் வைத்துக்கொள்வதை தவிர்க்கவும். ஏனெனில் அதனால் சிக்கல்கள் வரும்.

ஜனவரி மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை சளித்தொல்லை அதிகமாக இருக்கும். ஜலதோஷம் பிடிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.

கரும்பு சாறு அதிகம் பருகாமலும், அதிக அளவில் கோபப்படாமலும் இருப்பது நல்லது.

இவை அனைத்தும், மீன லக்ன காரர்களுக்கான பொதுவான புத்தாண்டு பலன்கள் ஆகும். அவரவர் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் திசா புத்திகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.

என்ன நேயர்களே, மீன லக்னத்திற்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொண்டால் மட்டும் போதுமா? மற்ற லக்னத்திரற்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொள்ள விர்கோ நியூஸ் இணைய தளத்தை பாருங்கள்.

இந்த பலன்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால், லைக் செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். மறக்காமல் விர்கோ நியூஸ் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள் நன்றி. வணக்கம்.