2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்:  துலாம் லக்னம்!

பாவ புண்ணிய கணக்குகளை பக்குவமாக எடைபோட்டு வாழ்க்கையில் நடைபோடும் துலாம் லக்ன  நேயர்களுக்கு வணக்கம். ஆங்கில புத்தாண்டான 2020ம் ஆண்டு, உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, பணம் மற்றும் பொருள் வரவுகளை தரும் வகையிலேயே இந்த ஆங்கில புத்தாண்டு அமைந்துள்ளது.

துலாம் லக்னத்தில் பிறந்த பெரும்பாலானவர்கள் இந்த ஆண்டு இருக்கும் வீட்டை விட்டு வேறு வீட்டுக்கு மாறுவார்கள். ஒரே வீட்டில் இருப்பவர்கள் சிலர் தனிக்குடித்தனம் செல்வார்கள்.

திருமண தடையால் தள்ளிப்போன பலருக்கு இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் திருமணம் கைகூடி வரும். சிலருக்கு மனம் விரும்பிய வகையில் திருமணம் நடக்கும்.

மூத்த சகோதர சகோதரிகள் வழியில் தொழில் அமையும், பொருளும் வந்து சேரும். அவர்கள் நல்ல வழிகாட்டியாக இருந்து உங்களை உயர்த்துவார்கள்.

இதுவரை மூத்த சகோதர வழியில் வந்த பணம் பொருள் போன்றவை திட்டமிடாத காரணத்தால், விரயம் ஆகி இருக்கும். எனவே, இந்த முறை அவ்வாறு நடக்க விடாமல் எச்சரிக்கையாக கையாண்டு வெற்றி அடைய வேண்டும். வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும்.

அரசு வழியில் கடந்த மூன்று வருடங்களில் இழுபறியாக இருந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நிறைவேறி. பணம் கைக்கு வரும் . இதனால் பணத்தடைகள் நீங்கும்.

ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்ட முதலீட்டாளர்கள், புரோக்கர்கள் இந்த ஆண்டு நல்ல லாபம் பார்ப்பார்கள். தொழில் சூடுபிடிக்க ஆரம்பிக்கும். பெயிண்ட் தொழில் ஈடுபட்டவர்களும் தங்கள் தொழிலில் மேன்மையை காண்பார்கள்.

புழக்கத்தில் இருக்கும் பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.

நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்க முன்னெச்சரிக்கையாக உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

வீட்டில் உள்ள வயதானவர்களுக்கு உடல்நிலை பாதிப்புகளால் சிக்கல் வரலாம். அதே சமயத்தில் குழந்தைகளின் வரவும் இருக்கும்.

கலைத்துறையில் கடந்த ஐந்து வருடங்களாக போராடி வருபவர்களுக்கு இந்த ஆண்டு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

புதிய ஒப்பந்தங்கள், குறிப்பாக ஏற்றுமதி-இறக்குமதி தொழில் தொடர்பான ஒப்பந்தங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. முதலீடு செய்யும் பணம் முடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

முக்கியமான விஷயங்களில் முடிவு எடுக்கும்போது, தந்தையுடன் ஆலோசனை செய்வது நல்ல பலனை தரும்.

விருப்பமான சுற்றுலா தளங்களுக்கு சென்று வர வாய்ப்பு கிடைக்கும்.

மூதாதையர் சொத்துக்களில் பாகப்பிரிவினை நடந்தால், அதற்கு தடை சொல்ல வேண்டாம், சொத்துக்கள் சேர வாய்ப்பு அதிகம் உள்ளது.

துலாம் லக்ன நேயர்களுக்கு வசதி வாய்ப்புகளும் பஞ்சம் இல்லாமல் கிடைக்கும். நல்ல பலன்களும் அமையும். ஆனால் ஊதாரித்தனமாக இருந்தால், ஆண்டின் இறுதியில் தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகள் நெருக்கடியை தந்து விடும்.

எனவே எதிலும் திட்டமிடலும், சிக்கனமும் மிகவும் முக்கியம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

இவை அனைத்தும், துலாம் லக்னத்தில் காரர்களுக்கான பொதுவான புத்தாண்டு பலன்கள் ஆகும். அவரவர் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் திசா புத்திகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.

என்ன நேயர்களே, துலாம் லக்னத்தில் புத்தாண்டு பலன்களை அறிந்து கொண்டால் மட்டும் போதுமா? மற்ற ராசிகளுக்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொள்ள விர்கோ நியூஸ் இணைய தளத்தை பாருங்கள்.

இந்த பலன்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால், லைக் செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். மறக்காமல் விர்கோ நியூஸ் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள் நன்றி. வணக்கம்.