2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: மிதுன லக்னம்!

யாருக்கும் இடையூறு இல்லாமல் ஒரு வேலையை எப்படி செய்து முடிப்பது என்ற சிந்தனையுடன் செயல்படும் மிதுன லக்ன நேயர்களுக்கு வணக்கம். ஆங்கில புத்தாண்டான 2020ம் ஆண்டு, மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

மிதுன லக்ன காரர்களுக்கு இந்த ஆண்டு பல வகையிலும் மகிழ்ச்சி தரும் ஆண்டாகவே அமைந்துள்ளது.

மிதுன லக்னத்தில் பிறந்த ஆண்கள் தங்கள் மனைவியோடும், பெண்கள் தங்கள் கணவரோடும் அதிக நெருக்கமாக இருப்பார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இருவரும் இணைந்தே செயல்படும் வாய்ப்பு ஏற்படும்.

அதேபோல், கூட்டு தொழிலில் ஈடுபட்டுள்ள பங்குதாரர்கள் தங்கள் பார்ட்னர்களுடன் மிகவும் இணக்கமாக நடந்து கொள்வார்கள்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு அல்லது அரசு சார்ந்த உயர் பொறுப்பு கிடைக்கும். அதன்மூலம் குடும்பத்தில் வருவாய் அதிகரிக்கும்.

மிதுன லக்ன காரர்களுக்கு விலை உயர்ந்த பொருட்கள், கணினி சார்ந்த பொருட்களும் இந்த ஆண்டு அதிக அளவில் வந்து சேரும். பழைய பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்கள் வாங்கும் அமைப்பும் உண்டு.

பலர் தூர தேசத்திற்கு சென்று வருவார்கள். இதற்கான அறிகுறி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே தெரிந்திருக்கும்.

பண வரவுகள் அதிகரித்து பணத்தட்டுப்பாடு நீங்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து வருவாயும், கேட்ட இடத்தில் இருந்து கடனும் கிடைக்கும்.

பண நடமாட்டம் அதிகரித்தாலும் அலைச்சல் திரிச்சலும் அதிகமாக இருக்கும். ஆனால், அலைச்சலுக்கு ஏற்ப பணமும் கிடைக்கும்.

தொழில் வளர்ச்சி மேலோங்கும். குறிப்பாக ஊடக துறையை சேர்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பலர் நல்ல பிரபலத்தையும் புகழையும் அடைவார்கள்.

மிதுன லக்ன காரர்கள் இந்த ஆண்டு பழ வகைகளை அதிகம் சாப்பிடுவார்கள். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

இதுவரை இருந்த நெருக்கடிகள் அனைத்தும் மறைந்து முன்னேற்றமும், மன மகிழ்ச்சியும் கிடைக்கும். ஆனால், அதுவே தலை கணத்தையும் ஏற்படுத்தி, அனைத்தையும் கெடுத்துவிடும்.

எனவே, மிதுன லக்ன காரர்கள், எந்த நிலையிலும் தலை கணத்துடன் நடந்து கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இவை அனைத்தும், மிதுன லக்ன காரர்களுக்கான பொதுவான புத்தாண்டு பலன்கள் ஆகும். அவரவர் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் திசா புத்திகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.

என்ன நேயர்களே, மிதுன லக்னத்திற்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொண்டால் மட்டும் போதுமா? மற்ற ராசிகளுக்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொள்ள விர்கோ நியூஸ் இணைய தளத்தை பாருங்கள்.

இந்த பலன்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால், லைக் செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். மறக்காமல் விர்கோ நியூஸ் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள் நன்றி. வணக்கம்.