2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்:  மகர லக்னம்!  

உழைப்பே உயர்வுக்கு வழி என்ற உன்னதமான தத்துவத்தை உணர்ந்த மகர   லக்ன நேயர்களுக்கு வணக்கம். ஆங்கில புத்தாண்டான 2020ம் ஆண்டு, உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

மகர லக்னத்தில் பிறந்தவர்கள், இந்த புத்தாண்டில் கண்டிப்பாக உயர்வை சந்திப்பார்கள். ஆனால் அதற்கு முன் சில நெருக்கடியை சந்தித்தே ஆக வேண்டும்.

இந்த புத்தாண்டில் மகர லக்ன காரர்கள் பலர் வெளிநாட்டுக்கு செல்வார்கள். ஏற்கனவே வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு, அந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

இதுவரை திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்கு, திருமணம் அமையும். பலருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டில் திருமணம் அமையும்.

பலருக்கு வீடு மாற்றும் சிந்தனை இருக்கும். அதனால், தற்போது குடியிருக்கும் வீட்டை மாற்றி, வேறு வீட்டுக்கு குடி பெயர்ந்தால், நல்ல முன்னேற்றத்தை சந்திக்கலாம்.

உங்கள் பிள்ளைகள் படிப்பில் இதுவரை மந்தமாக இருந்தால், இந்த ஆண்டு முதல், மிகவும் நன்றாக படிக்க தொடங்குவார்கள்.

மின்சாரப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, இந்த ஆண்டு விற்பனை அமோகமாக இருக்கும். அதனால் நல்ல லாபமும் கிடைக்கும்.

மருந்து தயாரிப்பு சம்பந்தப்பட்ட படிப்பு படிப்பவர்கள், அது சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்களுக்கு இந்த ஆண்டு வேலை வாய்ப்புகள் நல்லபடியாக அமையும்.

குடியிருக்கும் வீடுகளில் அடிப்படை வசதிகளான, டிரெய்னேஜ் போன்றவற்றில் பிரச்சினை ஏற்படும். அதனால், வீடு மாறும் எண்ணம் வரும். வீடு மாறினால் நல்லதாகவே அமையும்.

காதல் விஷயங்கள் திருப்திகரமாக இருக்காது. பருவ வயதில் உள்ள பிள்ளைகள் தேவை இல்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

தந்தைக்கு மருத்துவ செலவுகள் வரும். எனவே சிறிய அளவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் உடனுக்குடன் சிகிச்சை அளிப்பது நல்லது.

இளம் வயதினருக்கு  மது போன்ற தவறான பழக்க வழக்கங்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். எச்சரிக்கையாக முன்கூட்டியே தவிர்ப்பது நல்லது.

சிலருக்கு வருமானவரி மற்றும் அரசு சார்ந்த விசாரணை மற்றும் சோதனையால் நெருக்கடி வரும். எனவே, மற்றவருக்கு சொந்தமான உடைமைகள், பணங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாமல் இருக்கவும்.

இவை அனைத்தும், மகர லக்ன காரர்களுக்கான பொதுவான புத்தாண்டு பலன்கள் ஆகும். அவரவர் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் திசா புத்திகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.

என்ன நேயர்களே, மகர லக்னத்திற்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொண்டால் மட்டும் போதுமா? மற்ற லக்னங்களுக்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொள்ள விர்கோ நியூஸ் இணைய தளத்தை பாருங்கள்.

இந்த பலன்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால், லைக் செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். மறக்காமல் விர்கோ நியூஸ் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள் நன்றி. வணக்கம்.