2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கடக லக்னம்!

 சிந்தனை வேகமும், செயல் வேகமும் நிறைந்த கடக லக்ன  நேயர்களுக்கு வணக்கம். ஆங்கில புத்தாண்டான 2020ம் ஆண்டு, கடக லக்ன காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

கடக லக்ன காரர்களுக்கு இந்த ஆங்கில புத்தாண்டு நல்ல மன மகிழ்ச்சி தரும் ஆண்டாகவே அமைந்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பட்ட கஷ்டங்கள், நெருக்கடிகள் அனைத்தும் முடிவுக்கு வரப்போகிறது.

அரசாங்கம் மற்றும் உயர் பொறுப்பில் இருக்கும் சகோதர சகோதரிகள் மூலம், கடக லக்ன காரர்களுக்கு பெரிய பெரிய உதவிகள் கிடைக்கும்.

அதன் மூலம் காரியங்கள் நிறைவேறும். பலர் லாபமும் உற்சாகமும் அடைவார்கள்.

இருந்தாலும், அளவுக்கு அதிகமான உற்சாகம் சிக்கலை உருவாக்கும் எனவே, எதிலும் கவனமும், எச்சரிக்கையும் அவசியம்.

கடக லக்ன  பெற்றோர்களின் குழந்தை எட்டு வயதை கடக்கும் நிலையில் இருந்தால், அந்த வீட்டில் செல்வ செழிப்பு மேலோங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பல் சீரமைப்பு வயிற்று கோளாறு போன்றவற்றுகாக செலவுகள் செய்ய வேண்டி வரும். தாயாருக்கும் மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.

பருவ வயதில் உள்ள பிள்ளைகளின் காதல் விஷயத்தை, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அணுகாமல், மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

வீடு, மனை போன்றவற்றில் முதலீடு செய்ய விரும்பும் கடக ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சிலர் தவறாக வழி நடத்தி, முன் பணம் கொடுக்க வைத்து விடுவார்கள். ஆனால், மீதி பணத்தை கொடுக்க முடியாமல், நஷ்டத்திற்கும் நெருக்கடிக்கும் ஆளாகும் நிலை வரும். எனவே எச்சரிக்கை தேவை.

ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைக்கும்.

இவை அனைத்தும், கடக லக்ன காரர்களுக்கான பொதுவான புத்தாண்டு பலன்கள் ஆகும். அவரவர் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் திசா புத்திகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.

என்ன நேயர்களே, கடக  லக்ன காரர்களுக்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொண்டால் மட்டும் போதுமா? மற்ற லக்னங்களுக்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொள்ள விர்கோ நியூஸ் இணைய தளத்தை பாருங்கள்.

இந்த பலன்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால், லைக் செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். மறக்காமல் விர்கோ நியூஸ் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள் நன்றி. வணக்கம்.