2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: மேஷ லக்னம்!

சுறுசுறுப்புக்கும், தைரியத்திற்கும் பெயர்பெற்ற மேஷ லக்னத்தில் பிறந்த நேயர்களுக்கு வணக்கம். ஆங்கில புத்தாண்டான 2020ம் ஆண்டு, உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

மேஷ லக்னத்தை சேர்ந்தவர்களுக்கு, இந்த ஆங்கில புத்தாண்டு, நல்ல பலன்களை தரும் ஆண்டாக அமைகிறது.

குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்களுக்கு அதிபதியான சுக்கிரன், புத்தாண்டின் தொடக்கத்தில், பத்தாம் இடத்தில் அமருவதால், கணவனாக இருந்தால் மனைவிக்கும், மனைவியாக இருந்தால் கணவனுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். அதன்மூலம் வருமானமும் கிடைக்கும்.

தைரியம் மற்றும் வெற்றி ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், ஒன்பதாம் இடத்தில் அமைவதால், கல்வி மற்றும் ஆன்மீக தொடர்பான, வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் சிறப்பாக அமையும்.

சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள பல முக்கிய புள்ளிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

இதுவரை இருந்த நட்பு வட்டத்தில் இருந்து விலகி, நீங்கள் புதிய நட்பு வட்டத்தில் இணைவீர்கள். உங்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை தரும்.

லக்னாதிபதியான செவ்வாய் எட்டாம் வீட்டில் அமருவதால், ஏற்கனவே பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள், அதில் இருந்து விடுபடுவார்கள்.

மற்றவர்கள், புதிய பிரச்சினைகள் எதுவும் உருவாகாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

மனைவி வழியில் சில தன வரவுகள் கிடைக்கும். அதேபோல், சில சிக்கல்களும் தேடி வரும்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும்.  சிலர் புதிய இடத்தை நாடி செல்வார்கள். சிலர் புதிய இடங்களுக்கு குடியேறுவார்கள்.

தாயாரை குறிக்கும் சந்திரன் பதினோராம் இடத்தில் இருப்பதால், தாயாருக்கு உடல் நிலையில் பாதிப்புகள் வரும். எனவே அவருக்கு உடனுக்குடன், சிகிச்சை அளிப்பது நல்லது.

மேஷ லக்னத்தில் பிறந்த சிலருக்கு  இந்த ஆண்டு, கருணை அடிப்படையில், தாயாரின் பணி கிடைக்கும்.

முதியோர் இல்லம் அல்லது உறவினர்கள் அரவணைப்பில் இருக்கும் தாயாரை வீட்டுக்கு அழைத்து வந்தால் மட்டுமே யோகம் வரும்.

மேலும்,. தாயாருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை மனப்பூர்வமாக செய்வதன் மூலம், மேஷ லக்னக்காரர்களின் நெருக்கடிகள் தீரும். யோகங்கள் பெருகும்.

புதிய தொழில் முயற்சிகள் கை கொடுக்கும். ஆனால், அதற்கு முன் கடுமையான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

ஏற்கனவே இருக்கும் பழைய கடன்களை அடைக்க,  புதிதாக கடன் வாங்க நேரும். அதற்காக கவலைப்பட வேண்டாம். அவ்வாறு வாங்கும் புதிய கடன்களும் விரைவில் அடைபடும்.

கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் உண்மையாக, விசுவாசமாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் போகும்.

வேலை அல்லது தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்த தந்தை, வீடு திரும்பி, குடும்பத்தோடு இருப்பார். சில குடும்பங்களில் தந்தை – மகன் உறவில் சிறு சிறு உரசல்கள் வரும்.

தொழிலில் புது முயற்சிகள், புதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக அமையும். தொழிலுக்காக கடன் வாங்கினால், வங்கிகளில் மட்டுமே கடன் வாங்க வேண்டும். தனியாரிடம் கடன் வாங்கினால் அதை திருப்பி செலுத்த முடியாமல் நெருக்கடிக்கு ஆளாக நேரும்.

புத்தாண்டின் தொடக்கத்தில் தொழில் மற்றும் பண  நெருக்கடி கண்டிப்பாக  இருக்கும். ஆனால், போகப்போக, கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கடிகள் அனைத்தும் முடிவுக்கு வரும். அதனால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இவை அனைத்தும், மேஷ லக்னத்தில் பிரந்தவர்களுக்கான  பொதுவான புத்தாண்டு பலன்கள் ஆகும். அவரவர் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் திசா புத்திகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.

என்ன நேயர்களே, மேஷ லக்னத்திற்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொண்டால் மட்டும் போதுமா? மற்ற லக்னத்திற்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொள்ள விர்கோ நியூஸ் இணைய தளத்தை பாருங்கள்.

இந்த பலன்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால், லைக் செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். மறக்காமல் விர்கோ நியூஸ் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள் நன்றி. வணக்கம்.