2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்:  கும்ப லக்னம்!

எந்த சூழலிலும் உணர்ச்சி வசப்படாமல், அடுத்தவர் மனதில் உள்ளதையும் கூர்மையாக அறிந்து உணரும் தன்மை உள்ள கும்ப லக்ன நேயர்களுக்கு வணக்கம். ஆங்கில புத்தாண்டான 2020ம் ஆண்டு, உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

கும்ப லக்ன காரர்களுக்கு, இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே நல்ல முன்னேற்றமான பலன்கள் நடைபெற ஆரம்பிக்கும்.

பொங்கல் பண்டிகையை ஒட்டியே தன வரவுகள் அதிகரிக்க தொடங்கும். புதிய ஒப்பந்தங்கள் பலவும் கையெழுத்து ஆகும். அதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். மனது மகிழ்ச்சி அடையும். எனினும் பணத்தை சிக்கனமாக பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.

சகோதர சகோதரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

வேலையை விட்ட பலருக்கு அதே இடத்தில் இருந்து மீண்டும் அழைப்பு வர ஆரம்பிக்கும். நெருக்கடி மற்றும் கைவிட்ட தொழில்களும் மீண்டும் அமைய வாய்ப்பு கிடைக்கும்.

இதுவரை, எதுவும் நடக்கவில்லையே என்று கடவும் மீதே அவநம்பிக்கையை இருந்தவர்கள், இந்த ஆண்டு வாராவாரம் கோயிலுக்கு போய் இறைவனை தரிசிப்பதன் மூலம், மீண்டும் உன்னதமான நிலையை அடையலாம்.

செந்தில் ஆண்டவர், பழனி ஆண்டவர், கோட்டை மாரியம்மன் போன்ற தெய்வங்களை வழிபடுதல் மிகவும் முன்னேற்றத்தை கொடுக்கும்.

தாய் தந்தையரை மிகவும் அன்பாக நடத்த வேண்டும். அவர்களுக்கு பிடித்த சுற்றுலா தளங்கள் மற்றும் ஆன்மீக தளங்களுக்கு அவர்களை அழைத்து சென்றால், நல்ல பலன்கள் கூடுதலாக கிடைக்கும்.

தாய் தந்தை இல்லாதவர்கள், அவர்களின் உருவப்படத்திற்கு வழிபாடு செய்யலாம் அல்லது, அவர்களுக்கான திதியை கொடுத்தால் நல்லது.

ஆண்களாக இருந்தால் பெண்களிடமும், பெண்களாக இருந்தால் ஆண்களிடமும் ஒருவிதமான ஈர்ப்பு வரும். அதற்கு கொஞ்சமும் இடம் கொடுக்காமல் இருந்தால் நல்லது.

திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இருந்தவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்கும்.

வருவாய் பெருகினாலும், வேளாவேளைக்கு உணவு அருந்தவும், தூங்கவும் முடியாமல் போகும். எனவே, அதற்காக டைம் டேபிள் போட்டு வாழ பழகிக்கொள்ளவும்.

மார்புக்கும் – வயிற்ருக்கும் இடையே வலி, மூச்சிறைப்பு போன்ற உடல் உபாதைகள் வரும். உரிய நேரத்தில் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

மது போன்ற போதை பழக்கங்கள் இருந்தால் தவிர்க்கவும். அல்லது முடிந்தவரை கட்டுக்குள் வைக்கவும்.

பிப்ரவரி மாத வாக்கில் ஆண் – பெண் உறவுகளுக்கு இடையே சந்தேகங்களும், அதனால் சிக்கல்களும் வரும். அதற்கு இடம் கொடுக்காமல் இருக்கவும்.

பலர் புதிய படிப்புகளை விரும்பி படிப்பார்கள். பள்ளி அல்லது கல்வி சம்பந்தப்பட்ட இடங்களில் பணியாற்றுபவர்களுக்கு, அளவுக்கு அதிகமான வேலை செய்யும் நிர்பந்தம் வரும். அதை மறுக்காமல் மனப்பூர்வமாக செய்பவர்கள், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை பெறுவார்கள்.

கருவுற்ற பெண்கள், டெலிவரி நேரத்தில் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் போகும் நிலையை தவிர்க்க, முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளவும்.

இவை அனைத்தும், கும்ப லக்ன காரர்களுக்கான பொதுவான புத்தாண்டு பலன்கள் ஆகும். அவரவர் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் திசா புத்திகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.

என்ன நேயர்களே, கும்ப லக்னத்திற்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொண்டால் மட்டும் போதுமா? மற்ற லக்னத்திற்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொள்ள விர்கோ நியூஸ் இணைய தளத்தை பாருங்கள்.

இந்த பலன்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால், லைக் செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். மறக்காமல் விர்கோ நியூஸ் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள் நன்றி. வணக்கம்.