2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்:  தனுசு லக்னம்!

அனுமானைப்போல ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாக இருக்கும் தனுசு லக்ன நேயர்களுக்கு வணக்கம். ஆங்கில புத்தாண்டான 2020ம் ஆண்டு, உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள், கடந்த பத்து ஆண்டுகளாக அனுபவித்து வந்த சோதனைகள் நெருக்கடிகள் அனைத்தும் முடிவுக்கு வரப்போகிறது.

வேலை, தொழில், பெயர், புகழ், தான வரவு என அனைத்திலும் கிடைக்காமல் இருந்த அங்கீகாரம் கிடைப்பதற்கான வாசல் இந்த ஆண்டு திறக்கப்போகிறது. புதிய பாதைகள் புலப்பட ஆரம்பிக்கும்.

தொடர்ச்சியாக செய்ய முடியாமல் விட்டு விட்டு செய்த தொழில்கள் அனைத்தும் இனி, தொய்வின்றி நடக்கத் தொடங்கும்.

புதுப்புதுத் திட்டங்களும் கைகூடும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பண வரவு தாராளமாக இருக்கும். அதன் பின்னர் தொடர்ச்சியாக பணம் பல வழிகளிலும் வரத்தொடங்கும்.

கூடுமானவரை சோம்பலை தள்ளி வைத்து, எடுக்கும் காரியத்தை உடனுக்குடன் செய்வதற்கு பழகிக்கொள்ள வேண்டும்.

பிள்ளைகளுக்கு வெளிநாடு செல்லவும், அங்கு கல்வி கற்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

பருவ வயது உள்ள பிள்ளைகளால் சில மன சஞ்சலங்கள் ஏற்படும். எதையும் ஆவேசப்படாமல், சுமூகமாகத் தீர்வு காண வேண்டும்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

வேலையில்  இல்லாதவர்கள், வேலையில் இருப்பவர்களை திருமணம் செய்துகொண்டால், திருமணத்திற்குப்பின் வேலை கிடைக்கும்.

கடன் வாங்க நினைப்பவர்கள் வங்கிகளை அணுகினால், எளிதாகக் கடன் கிடைக்கும்.

ஆண்களால் பெண்களுக்கும், பெண்களால் ஆண்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படும் நிலை வரும். எனவே முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

செல்பேசி மற்றும் தொலைபேசியில் பேசும் சில விஷயங்கள் சிக்கலை ஏற்படுத்தும். எனவே, முக்கியமான ரகசியமான விஷயங்களை நேரடியாக பேசிக்கொள்வது நல்லது.

தந்தையாருடன் ஏற்படும் வீண் வம்பை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்மூலம் பண வரவுகளும் பொருள் ஆதாயங்களும் கிடைக்கும்.

கம்ப்யூட்டர் மற்றும் மென்பொருள் துறையை சார்ந்தவர்கள், வீட்டில் இருந்தே வேலை செய்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதை பயன்படுத்திக் கொள்ளவும்.

கால் முட்டியில் வலி மற்றும் வீக்கம் வந்து பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு முன்கூட்டியே தேவையான மருத்துவ செலவுகளை செய்து கொள்ளவும்.

பெண்களுக்கு தலையில் நீர் கோர்த்துக்கொண்டு தலைவலி போன்ற பாதிப்புகள் வரும். கண்ணாடி அணியும் நிலையம் வரும். உரிய நேரத்தில் கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

ஏற்கனவே இருக்கின்ற பழைய துணிமணிகளை வைத்தே இந்த ஆண்டும் ஓட்டி விடலாம் என்ற என்னத்தை மாற்றிக்கொள்ளுங்கள். மாதத்திற்கு ஒரு முறை புதுத்துணி எடுத்து உடுத்துங்கள் அப்போதுதான் பணவரவு அதிகரிக்கும்.

இவை அனைத்தும், தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பொதுவான புத்தாண்டு பலன்கள் ஆகும். அவரவர் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் திசா புத்திகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.

என்ன நேயர்களே, தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கான புத்தாண்டு பலன்களை அறிந்து கொண்டால் மட்டும் போதுமா? மற்ற லக்னங்களின்  புத்தாண்டு பலன்களை அறிந்து கொள்ள விர்கோ நியூஸ் இணைய தளத்தை பாருங்கள்.

இந்த பலன்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால், லைக் செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். மறக்காமல் விர்கோ நியூஸ் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள் நன்றி. வணக்கம்.