லட்சுமண் ஸ்ருதி’ இசைக்குழுவின் ராமன் மரணம்!

லட்சுமண் ஸ்ருதி இசைக்குழுவின் உரிமையாளரான ராமன் காலமானார்.

தமிழகத்தில் மிகவும் பிரபலமான இசைக்குழு ‘லட்சுமண் ஸ்ருதி’. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக மேடைக் கச்சேரிகளில் தனக்கென தனியிடம் பிடித்த இசைக்குழுவாக திகழ்கிறது.

,இசை ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்த இந்தக் குழுவை, லட்சுமணன், ராமன் ஆகிய சகோதரர்கள் நடத்தி வருகின்றனர்.

இவர்களில் ராமன் ‘லட்சுமண் ஸ்ருதி’யின் உரிமையாளராகவும் நிர்வாகியாகவும் இருந்து வந்தார். இந்தநிலையில், நேற்றிரவு ’லட்சுமண் ஸ்ருதி’ ராமன் காலமானார்.

இந்தச் செய்தி அறிந்ததும் திரையுலகினரும் இசையுலகைச் சேர்ந்தவர்களும் தமிழக மக்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

சென்னையில் அவர் வீட்டில் மரணம் அடைந்த ராமனுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இசையுலகிலும் மேடைக்கச்சேரிகளிலும் தனக்கென தனி பாணியைக் கொண்டு, மக்களைக் கவர்ந்த லட்சுமண் ஸ்ருதி இசைக்குழுவின் உரிமையாளரான ராமனின் மரணம், இசை ரசிகர்களை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.