ஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்!

ஒரே ராசியில் ஐந்தாறு கிரகங்கள் ஒன்று சேருவது சிலருக்கு பாதிப்பை கூட்டும் சிலருக்கு பலன்களை கூட்டும். ஆனால் யாருக்கு என்ன நடக்கும் என்பதை கூறுவது எளிதல்ல.

தற்போது, தனுசு ராசியில், குரு, சனி, கேது, சூரியன், புதன் ஆகிய ஐந்து கிரகங்கள் உள்ளன. இதில் ஆறாவதாக சந்திரனும் இரண்டேகால் நாட்கள் சேரப்போகிறது.

டிசம்பர் 25 ம் தேதி முதல் ஜனவரி 10 ம் தேதி வரை இந்த தாக்கம் அதிகமாக இருக்கும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும்.

இந்த காலகட்டத்தில் நெருக்கடிகள் மற்றும் பாதிப்புகளை குறைக்க, ஒவ்வொரு லக்ன காரர்களும், ஒவ்வொரு ஆலயத்திற்கு சென்று உரிய முறையில் வழிபாடுகள் மற்றும் பரிகாரங்கள் செய்துகொள்வது நல்லது.

பரிகாரங்களுக்காக கோயிலுக்கு செல்லும்போது கவனமாகவும், எச்சரிக்கையாகவும் சென்று வர வேண்டும்.

அதன்படி, டிசம்பர் 25 ம் தேதி முதல் ஜனவரி 10 ம் தேதி வரை, எந்தெந்த லக்ன காரர்கள் எந்தெந்த ஆலயம் சென்று வழிபட வேண்டும் என்று ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன் கூறியுள்ள விவரங்கள் வருமாறு:-

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் அவினாசி சென்று அவினாசி லிங்கத்தை வழிபட வேண்டும்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள், கன்னியாகுமரி சென்று குமரி அன்னையை வழிபட வேண்டும்.

மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள், நாங்குநேரி சென்று வானமாமலையை வழிபட வேண்டும்.

கடக லக்னத்தில் பிறந்தவர்கள், ஓசூர் சென்று மலைமேல் அமர்ந்த சந்திரசூடேஸ்வரரை வழிபட வேண்டும்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள், திருவண்ணாமலை சென்று  அருணாச்சலேஸ்வரரை வழிபட வேண்டும்.

கன்னியா லக்னத்தில் பிறந்தவர்கள், பவானி சென்று சங்கமேஸ்வரரை வழிபட வேண்டும்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள், கும்பகோணம் சென்று கும்பேஸ்வரரை வழிபட வேண்டும்.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள், மதுரை சென்று கள்ளழகரை வழிபட வேண்டும்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள், ரத்னகிரி சென்று முருகனை வழிபட வேண்டும்.

மகர லக்னத்தில் பிறந்தவர்கள், திருவேற்காடு சென்று கருமாரியம்மனை வழிபட வேண்டும்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள், நவ திருப்பதியில் அமைந்துள்ள இரட்டை திருப்பதியை வழிபட வேண்டும்.

மீன லக்னத்தில் பிறந்தவர்கள் நாகப்பட்டினம் சென்று அங்குள்ள சிவனை வழிபட வேண்டும்.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் பரிகாரம் அல்ல பரிகார திருத்தலங்கள் மட்டுமே.