டிசம்பர் 21 முதல்  ஜனவரி 1 வரை அனைத்து கல்லூரி,-பல்கலைக்கும் விடுமுறை – தேர்வுகள் ஒத்திவைப்பு

கிறிஸ்துமஸ், உள்ளாட்சி தேர்தல், ஆங்கில வருட பிறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இன்று முதல் ஜனவரி 1-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இன்று முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டிசம்பர் 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருந்த 8 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 2-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.