பிரச்சினைக்கு தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது – ரஜினி!

எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிட கூடாது என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ரஜினி தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு:-

ரஜினிகாந்த் தனது ட்விட்டரில், “எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.