தேச துரோக வழக்கு : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை!

தேச துரோக வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு, பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் 2007-ம் ஆண்டு அதிபராக இருந்தபோது பாகிஸ்தானின் அரசியல் சட்டத்தை முடக்கி நெருக்கடி நிலையை அறிவித்தார்.

இதற்காக, 2013 ம் ஆண்டு பெஷாவர் சிறப்பு நீதிமன்றத்தில்  முஷாரப் மீது  தேச துரோக வழக்கு  தொடரப்பட்டது. அதற்கான ஆதாரங்களும் அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.

எனினும்,  மேல்முறையீடு  காரணமாக, இந்த வழக்கு விசாரணை நீடித்து வந்தது. இந்நிலையில், 2016  ம் ஆண்டு, உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி துபாய்க்கு சென்றார்..

இதுவரை அவர் நாடு திரும்பவில்லை. தற்போது துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பெஷாவர் உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி வக்கார் அஹ்மத் சேத் தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தின்  மூன்று பேர் கொண்ட அமர்வு,  பர்வேஸ் முஷாரஃபுக்கு தேசத் துரோக வழக்கில் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்து உள்ளது.