கைலாசா நாட்டுக்கு குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா வெளியிட்ட தகவல்!

கைலாசா நாட்டுக்கு குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்தியானந்தா சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் அவரை தேடி வருகிறது காவல் துறை.

அவர் ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி, கைலாசா என்று ஒரு நாட்டை உருவாக்கி, தனி அரசாங்கம் நடத்தி வருகிறார் என்று ஒரு தகவல் வெளியானது.

ஆனால், அந்த தகவல் அனைத்தும் பொய் என்று ஈக்வடார் நாட்டு தூதரகம் விளக்கம் அளித்தது.

அதே சமயம், எங்கோ இருந்து கொண்டு, அடிக்கடி சொற்பொழிவு வீடியோக்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார் நித்யானந்தா.

அப்படி அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், என்ன அடிச்சாலும் தாங்குறாண்டா என்று சொல்லும்  வடிவேலு காமெடியைப் போல் எனது நிலை ஆகிவிட்டது என்று கூறியுள்ளார் அவர்.

மேலும், ஊடகங்கள் முழு நேரமும் என்னை பற்றித்தான் பேசிவருகின்றன. என நித்யானந்தா கூறினார். மீம்ஸ் போடும் மாம்ஸ்களா உங்கள் மீம்ஸ்களால் தான் கைலாசா பிரபலமானது.

முன்பெல்லாம் நாட்டில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால்தான் அதனை திசை திருப்ப தம்மை பற்றிய செய்திகள் உலாவும்.

ஆனால் தற்போது ஏதாவது பெரிய பிரச்சினை வரும்போது தவிர்த்து மற்ற நேரங்களிலெல்லாம் முழுநேரமும் தம்மை பற்றித்தான் ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன.

2003 -ம் ஆண்டு முதல் நான் சந்திக்காத குற்றப்பிரிவுகளே இல்லை, தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நான் நிரபராதி என்று நிரூபித்துள்ளேன்.

நான் செய்ய வேண்டிய என்னுடைய ஆன்மிக கடமையை தொடர்ந்து எவ்வளவு தடை வந்தாலும் செய்து கொண்டே இருக்கிறேன்.

இதனால் தமிழர்கள் ஆன்மிக ரீதியாக, என்னை எப்போதோ தலைவர் என்று ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.

கைலாசா நாடு அமைக்கும் திட்டத்தால் எனக்கு அடிதான் விழும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு மாறாக ஆதரவு பெருகி வருகிறது.

கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்,  கைலாசா நாட்டை உருவாக்குவேன். இதை செய்து முடித்தே தீருவேன் என்றும் அந்த வீடியோவில் நித்யானந்தா கூறி இருக்கிறார்.