எழிலான முகத்துக்கு துணையாகும் எலுமிச்சை!

கனிகளில் ராஜ கனி என்று அழைக்கப்படுவது எலுமிச்சை ஆகும். எலி கடிக்காமல் மிச்சம் வைத்த பழம் என்பதால், இதற்கு எலுமிச்சை என்று பெயர் வந்தது என்றும் சிலர் வேடிக்கையாக கூறுவதுண்டு.

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதால், அதன் சுவை புளிப்பாக இருக்கிறது. ஊறுகாய், ஜூஸ், என பல்வேறு உபயோகங்களை கொண்ட எலுமிச்சை அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகவும் இருக்கிறது.

எழில் நிறைந்த முகத்துக்கு எலுமிச்சை  பழத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று இப்போது பார்ப்போம்.

# எலுமிச்சை சாற்றை சிறிது தண்ணீரில் கலந்து, அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, சிறிது நேரம் உலர்ந்தபின், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர, சருமத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் மற்றும் கழுத்து பகுதி தோல்கள் பளபளப்பாகவும் மினுமினுப்பாகவும் மாறும்.

# கொஞ்சம் தயிரில் எலுமிச்சை சாற்றை கலந்து குழைத்து, முகத்தில் பூசி, கொஞ்ச நேரம் உலரவைத்து பின்னர் முகத்தை கழுவவேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வர முகம் பொலிவு பெறும்.

# முட்டையின் வெள்ளை கருவுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து, அதை முகத்தில் தடவி கொஞ்ச நேரம் வைத்திருக்க வேண்டும். அது உலர்ந்தபின்னர், கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள கருமை நீங்கி வெண்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.

# ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடேன், ஒரு தேக்கரண்டி தேனை கலந்து குழைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் உலரவைத்து, பின்னர் கழுவி விடவும். இவ்வாறு தினமும் செய்தால் முகம் மிகவும் பொலிவாக இருக்கும்.

# பாலில் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு நன்கு குழைத்து, அதை முகத்தில் தடவி, சிறிது உலர்ந்த பின்னர் கழுவி விடவும். இப்படி தொடர்ந்து செய்து வர, சருமம் வெண்மையாக பளபளப்பாக மாறும்.

# இரவில் எலுமிச்சை சாற்றுடன் மில்க் கிரீம் கலந்து வைத்துவிட்டு, அதை காலை எழுந்ததும் முகத்தில் தடவினால், சருமத்தின் நிறம் விரைவில் வெண்மையாக மாறும்.

# எலுமிச்சை சாற்றுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் நன்கு தடவி, சிறிது நேரம் கழித்து வாஷ் பண்ண வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால், சருமம் பளபளப்பாக மாறுவதுடன், முகத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறையும்.