“தலைவர் 168′ : ரஜினியுடன் இனைந்து குஷ்பு – மீனா  நடிக்கின்றனர்! 

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள “தலைவர் “168”  படத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. ரஜினியின்  பழைய ஜோடிகளான மீனா, குஷ்பு ஆகியோர் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

இதற்குமுன் ரஜினியுடன்  படையப்பா படத்தில் சிறு கதா பாத்திரத்தில் பிரகாஷ்ராஜும் இப்படத்தில் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

ரஜினியுடன் ‘முத்து’, ‘எஜமான்’, ‘வீரா’ ஆகிய படங்களில் நடித்துள்ள மீனா, திருமணத்துக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் படமாக ‘தலைவர் 168’ அமைந்துள்ளது.

இதுகுறித்து பேசிய மீனா, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ரஜினி சாரோடு நீண்ட வருடங்கள் கழித்து நடிக்கவுள்ளேன். அதனால் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.

நல்ல கதை, நல்ல கேரக்டர். எனது காட்சிகள் எல்லாம் ரொம்பவே கலகலப்பாக இருக்கும். கண்டிப்பாக ரசிகர்களுக்குப் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், 28 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த படத்தில் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் குஷ்பு. 1992-ம் ஆண்டு வெளியான ‘மன்னன்’ மற்றும் ‘அண்ணாமலை’ ஆகிய படங்களுக்குப் பிறகு  தொடர்ந்து ரஜினி – குஷ்பு இணைந்து நடிக்கவில்லை.