உலகின் இளம் வயது பிரதமரானார் பின்லாந்தின் சன்னா மரின்!

பின்லாந்து நாட்டின் பிரதமராக 34 வயது பெண் சன்னா மரின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் உலகின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

பின்லாந்தில் நடந்த பொதுத் தேர்தலில் சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெற்று நான்கு கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்தது. இதில் பிரதமராக அண்டி ரின்னே என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், அண்மையில், பின்லாந்தில் நடந்த தபால் துறை பணியாளர்கள் வேலை நிறுத்ததை, அவர் முறையாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அதனால், கூட்டணி கட்சிகள் அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டன. அதன் காரணமாக, அண்டி ரின்னே கடந்த வாரம், தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதைத்தொடர்ந்து, ஜனநாயகக் கட்சி சார்ப்பில் நடந்த பிரதமர் வேட்பாளர்களுக்கான தேர்தலில் சன்னா மரின் பின்லாந்தின் பிரதமராக தேந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு முன்பு, நியூசிலாந்தின் ஜெசிந்தாவும்,  உக்ரைனின் ஒலெக்ஸி ஹான்சரும் உலகின் இளம் வயது பிரதமராக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .