உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு: நாளை மறுநாள் விசாரணை!

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு ஆகியவைகளை பின்பற்றாமல் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளதாக திமுக குற்றம் சாட்டியது.

மேலும், உள்ளாட்சி மன்ற  தேர்தல் அறிவிப்புக்கு  எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாகவும்  கூறியிருந்தது.

இதன்படி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக  உச்ச நீதிமன்றத்தில் திமுக  மனு தாக்கல் செய்துள்ளது.

வார்டு வரையறை பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை எனவும்  1991-ம் வருட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திமுகவின் மனுவை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள  உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.