உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும்  30 ஆம் தேதிகளில் தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, மற்றும் வரும் 27 மற்றும்  30 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல்  நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என்றும் கூறியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை  வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் நடைபெறும்.  டிசம்பர் 17 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை. வேட்பு மனுக்களை திரும்ப பெற 19 ஆம் தேதி கடைசி நாளாகும்.