உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும்  30 ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், தொகுதி வரையறை, இடஒதுக்கீடு போன்ற சட்டவிதிகளை, முறையாக பின்பற்றும் வரை தேர்தல் அறிவிப்பு ஆணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொகுதி மற்றும் வார்டு வரையறை, இடஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் ஏற்கெனவே தொடரப்பட்டுள்ளன. இதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை நிறுத்தி வைக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.