சிவா இயக்கும் ரஜினியின் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் – சூரி!

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் முதன் முறையாக சூரியும் ரஜினியுடன் இனைந்து நடிக்க உள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை  டிசம்பர் 5-ம் தேதி நடத்தி, பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

தர்பார்  படத்தைத் தொடர்ந்து, சிவா இயக்கத்தில் நடிக்கத் கால்ஷீட்  ஒதுக்கியுள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப்படத்தின், படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்குகின்றன.

இந்தப் படத்தில் முதன்முறையாக ரஜினியுடன் சூரி நடிக்கவுள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே, இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் படமாக இது அமையவுள்ளது. இவரது அம்மா மேனகா ரஜினியுடன் ‘நெற்றிக்கண்’ என்னும் படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.