மகாராஷ்டிரா முதல்வராகப் பதவி ஏற்றார் உத்தவ் தாக்கரே: விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு!

மகாராஷ்டிராவில் பல்வேறு குழப்பங்களால், கடந்த 36 நாட்களாக நீடித்த இழுபறிக்கு பின்னர், அம்மாநிலத்தின் 18-வது முதல்வராக, வியாழக்கிழமை உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார்.

ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், என்சிபி சார்பில் ஜெயந்த் பாட்டீல், சந்திரகாந்த் பூஜ்பால், காங்கிரஸ் சார்பில் பாலசாஹேப் தோரட், நிதின் ராவத் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதற்காக, மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி பார்க்கில், பாலிவுட் கலைஞர்களின் கைவண்ணத்தில், மராட்டிய மன்னர் சிவாஜியின் அரசவை போன்ற அரங்கு அமைக்கப்பட்டது

விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், மூத்த தலைவர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, அகமது படேல், எம்என்எஸ் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சந்திரகாந்த் பாட்டீல், சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணியில் அமைய உள்ள மகா விகாஸ் அகாதி அரசு முதல் கட்டமாக விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது.

மேலும், யையும், வேலைவாய்ப்பில் 80 சதவீதம் உள்ளூரில் வசிப்பவர்களுக்கும் உள்மாநில மக்களுக்கே முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில், ஒரு ரூபாய் மருத்துவமனை, பத்து ரூபாய் உணவு போன்ற திட்டங்களை உடனடியாக தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.