டிடிவி தினகரன் குடும்பத்தினர்  படுத்திய பாடு: அதிமுக பொதுக்குழுவில் பொங்கிய முதல்வர் பழனிசாமி!

டிடிவி தினகரனும் அவரது குடும்பத்தினரும் அதிமுகவை பாடாய் படுத்த்யது அனைவருக்கும் தெரியும். அதிமுக அரசு  யாருக்கும் அடிமை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ. எம்பிக்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்து 400 பேர்  கலந்து கொண்டனர்.

பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செய்தனர்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடிக்கும் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தும், நீட் தேர்வு விலக்கு மற்றும் திமுகவை விமர்சித்தும் என மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நாடாளுமன்ற தேர்தலில் சரிவை சந்தித்தோம். மக்கள் நாடாளுமன்றம், சட்டமன்றம் என பிரித்துப் பார்த்து வாக்களிக்கின்றனர்.

மத்தியிலும் மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வரவேண்டுமென தீர்மாணிப்பதில் தமிழக மக்கள் சிறப்பானவர்கள். குறுகிய காலத்தில் கூட்டணி அமைந்ததாலும் பிரசாரத்தில் சரியாக ஈடுபட முடியாததாலும் தான் சரிவு ஏற்பட்டது.

என்னுடைய தந்தை திமுகவில் இருந்தவர். 1974-இல் முதன்முதலில் அதிமுக கொடி கம்பத்தை எனது கிராமத்தில் நட்டேன். உடனடியாக அதைப் பிடுங்கி எறிந்தனர். அன்று ஆரம்பித்த கொடிக்கம்ப பிரச்சனை இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் தைரியம் ஸ்டாலினுக்கு இல்லை. அதனால்தான் அவர் அரசு ஊழியர்களைத் தூண்டிவிடுகிறார்.

சிலர் கட்சியே துவங்காமல் பேசுகின்றனர். யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை. டிடிவி தினகரனும் அவரது குடும்பத்தினரும் எவ்வளவுப் பாடாய்ப்படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக அரசு யாருக்கும் அடிமை இல்லை.” என்று கூறினார்.