மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்: முதல்வராக பாட்னாவிஸ் – துணை முதல்வராக அஜித்பவார் பதவி ஏற்பு!

மகாராஷ்டிரா அரசில் புதிய திருப்பமாக பாஜகவை சேர்ந்த பாட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பாஜக – சிவசேனா கூட்டணிக்கு இடையே, முதல்வர் பதவி தொடர்பாக எழுந்த மோதலால், அங்கு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

அதனால், அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க முற்பட்டது.

இதற்கான பேச்சு வார்த்தைகளும் நடந்து வந்தன. ஆனால், திடீர் திருப்பமாக, பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.