பாஜகவுக்கு ஆதரவு அளித்தது அஜித் பவாரின் சொந்த முடிவு! சரத்பவார் விளக்கம்!

மகாராஷ்டிராவில், பாஜகவுக்கு ஆதரவு அளித்தது அஜித்பவாரின் சொந்த முடிவு. தேசியவாத காங்கிரசுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சரத்பவார் கூறியுள்ளார்.

இதனை விளக்கும் வகையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் – சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், காங்கிரஸ்-என்சிபி ஆதரவுடன் சிவசேனா தலைமையில் புதிய அரசு அமையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு வந்தது. இதற்கான பேச்சு வார்த்தைகளும் நடந்து முடிந்து விட்டன.

இந்நிலையில், இன்று காலை, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், சரத்பவாரின் உறவினருமான அஜித்பவார் துணை முதல்வராகவும், பட்னாவிஸ் முதல்வராகவும் இன்று காலை பதவி ஏற்றனர்.

இந்நிலையில் அஜித் பவார் பாஜக அரசுக்கு ஆதரவு அளிப்பது அவருடைய தனிப்பட்ட முடிவு. அதனை தேசியவாத காங்கிரஸ் கட்சியோ, அதன் உறுப்பினர்களோ எந்த வகையிலும் ஆதரவு அளிக்கவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்.

இது காங்கிரஸ் மற்றும் சிவசேனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  எனினும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரபுல் பட்டேல், இது எங்கள் கட்சியின் முடிவல்ல.  இதற்கு சரத் பவாரின் ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகின்றனர்.

இந்த சந்திப்பில், ஒரே இரவில், பாஜக ஆட்சி அமைக்கும் அளவுக்கு ஏற்பட்ட மாற்றத்தின் பின்னணியில் அரங்கேறியவை என்னென்ன என்பதும் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.