கோடீஸ்வரனாக்கும் நிஷ்கல யோகம்!

நிஷ்கல யோகம் அல்லது புதையல் யோகம் என்பது, நான்காம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் சேர்க்கை பெறுவது, பார்வை பெறுவது, பரிவர்த்தனை பெறுவதாகும்.

இவ்வாறு லக்னாதிபதிக்கும், நான்காம் அதிபதிக்கும் உள்ள தொடர்பே நிஷ்கல யோகமாகும். இதுவும் அரசியல் தலைவராகும் யோகத்தை வழங்கும் அமைப்பாகும்.

சில நேரங்களில், லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி பகை கிரகங்களாகவோ, பாதகாதிபதியாகவோ அமைவதுண்டு.

அந்த சமயங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் ஏற்ற இறக்கம், சிக்கல்கள் இருந்தாலும், வாய்ப்புகள் நிச்சயம் உண்டு.

கிடைக்கும் பதவி சாதாரண பதவியா? அல்லது எம்.எல்.ஏ, அமைச்சர் போன்ற உயர் பதவியா? என்பதை அவரவர் பூர்வ புண்ணியத்தை பொறுத்தே அமையும்.

நிஷ்கல யோக அமைப்பு ஆறு, எட்டு, பனிரண்டு  மறைவிடங்களில் இல்லாமல், நல்ல இடங்களில் அமைவதே சிறப்பு.

நிஷ்கல யோகம் அல்லது புதையல் யோகம் என்பது, புதையல் கிடைக்கும் யோகம் என்று நேரடியாக பொருள் கொள்ளக் கூடாது.

புதையல் கிடைத்தால் எப்படி திடீரென ஒருவர் மிகப்பெரிய செல்வந்தர் ஆகிறாரோ, அதேபோல், நிஷ்கல யோகம் வேலை செய்யும்போது, அவருக்கும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைத்து செல்வந்தார் ஆவார்.