அரசியல் பதவியை தரும் குருமங்கள யோகம்!

குருமங்கள யோகம் என்பது ஒரு ஜாதகத்தில் குருவுக்கும், மங்களன் என்று அழைக்கப்படும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பை குறிப்பதாகும். செவ்வாய் குரு சேர்க்கை. பார்வை, பரிவர்த்தனை ஆகியவை இந்த யோகத்தை தருகின்றன.

குரு தான் அமர்ந்த இடத்தில் இருந்து ஐந்து, ஏழு, ஒன்பது ஆகிய இடங்களை பார்வை செய்யும். செவ்வாய், தான் இருக்கும் இடத்தில் இருந்து நான்கு, ஏழு எட்டு ஆகிய இடங்களை பார்வை செய்யும்.

அதன்படி குரு செவ்வாய் சேர்க்கை, பார்வை, பரிவர்த்தனை இருந்தால், அது குரு மங்கள யோகமாகும்.

இந்த இரு கிரகங்களும், ஜாதகரின் லக்னத்திற்கு நல்ல ஆதிபத்தியம் பெற்று மறைவிடங்களில் இல்லாமல் இருந்தால், இந்த யோகம் நன்றாக வேலை செய்யும்.