சசிகலா விடுதலை ஆவதில் தொடரும் சிக்கல்: வரிசை கட்டும் புதிய வழக்குகள்!

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, தண்டனை காலம் முடிவதற்கு முன்பே விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் சிறையில் இருந்து வெளி வருவதற்கு முன்பே, மேலும் சில வழக்குகளில் அவர் சிக்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறையை விட்டு சசிகலா வெளியே சென்று வந்ததாக ஏற்கனவே எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

அந்த விசாரணை அறிக்கையின் முடிவுகள் அவருக்கு எதிராக இருப்பதால், அவர் சிறையில் இருந்து முன்கூட்டியே வெளியில் வர சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பணமதிப்பு இழப்பு காலத்தில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கியுள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அவர் மீது மேலும் சில வழக்குகள் தொடரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் சிறையில் இருந்து வெளிவருவது அவ்வளவு எளிதல்ல என்று சொல்லப்படுகிறது.