இந்தியாவின் புதிய அதிகாரபூர்வமான வரையப்படும்: மத்திய அரசு வெளியிட்டது!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, அதிகாரபூர்வமான இந்திய வரைபடத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, தற்போது  இந்தியாவில் 28 மாநிலங்களும், 9 யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு கடந்த  ஆகஸ்ட் 5-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு மாற்றியமைக்கப்பட்டது.

அந்த அறிவிப்பு அமுலுக்கு வந்த இரு நாட்களில், அதாவது கடந்த சனிக்கிழமை, மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவின் அதிகாரபூர்வ புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரின் லெப்டினண்ட் கவர்னராக குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி கிரிஸ் சந்திர மர்முவும், யூனியன் பிரதேசமான லடாக்கின் லெப்டினண்ட் கவர்னராக திரிபுரா கேடர் ஓய்வுபெற்ற அதிகாரி ராதாகிருஷ்ண மாத்தூரும் கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றனர்.

புதிய யூனியன் பிரதேசங்கள் செயல்பாட்டுக்கு வந்தபிறகு, இந்தியாவின் மொத்த மாநிலங்கள் 28 ஆகவும்,  யூனியன் பிரதேசங்கள் 9 ஆகவும் உள்ளன.

தற்போது, அந்தமான் & நிக்கோபார், சண்டிகார்,  டாமன் &டையு, தாதார் & நாகர் ஹாவேலி, டெல்லி, ஜம்மு & காஷ்மீர், லடாக், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகியவை யூனியன் பிரதேசங்களாக உள்ளன.

ஆந்திரப் பிரதேசம்,  அருணாசலப் பிரதேசம்,  அஸ்ஸாம், பீகார், சட்டிஸ்கர், கோவா, குஜராத்,  ஹரியானா,  ஹிமாசல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா,  மத்திய பிரதேசம்,  மகாராஷ்டிரா,  மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகலாந்து, ஒடிஸா,  பஞ்சாப்,  ராஜஸ்தான், சிக்கிம்,  தமிழ்நாடு,  தெலங்கானா,  திரிபுரா,  உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட்,  மேற்கு வங்கம் ஆகியவை மாநிலங்களாகும்.

 

.