பிகில் – கைதி: உண்மையான வெற்றிப்படம் எது?

விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி ஆகிய இரு படங்களும் தீபாவளி படங்களாக திரைக்கு வந்தன.

இதில் பிகில் படம் சுமார் ஆயிரத்து 100 திரை அரங்குகளிலும், கைதி படம்                    300 திரையரங்குகளிலும் வெளியானது. மேலும், பிகில் படம் பிகில் படத்தின் காட்சிகள் அக்டோபர் 25 ம் தேதியன்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டன.

இந்நிலையில், இரண்டு படங்களும் வெளியாகி ஒரு வாரத்தை கடந்து விட்டன. இப்படங்களின் வசூலை பொறுத்தவரை, பிகில் படம் ரூ. 200 கோடியும், கைதி படம் ரூ.  50 கோடியும் வசூல் செய்துள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிகில் திரைப்படம் ஒரு வருட காலத்தில் ரூ.180  கோடி முதலீட்டில் படமாக்கப்பட்டு, ரூ. 20 கோடி  லாபம் ஈட்டியுள்ளது.

ஆனால், கைதி திரைப்படம், ஆறு மாத காலத்தில் ரூ.30 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு, ரூ. 20 கோடி லாபம் ஈட்டியுள்ளது.