இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா மறைவு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான  ருதாஸ் தாஸ்குப்தா கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 83.

குருதாஸ் தாஸ்குப்தா கடந்த பல மாதங்களாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சிறந்த பேச்சாளராக அறியப்பட்ட குருதாஸ் தாஸ்குபதா அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் மூத்த தலைவராக இருந்தார்.

அவர் 1985 இல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 -இல் ஆண்டில் பன்ஸ்கூரா தொகுதியிலும் 2009 -இல் கட்டல் தொகுதியிலும் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக இருந்தார்.

சில காலமாக நுரையிரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த அவர் உடல்நிலை சரியில்லாததால் கட்சி பதவிகளில் இருந்து விலகினார். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தார். இந்நிலையில், குருதாஸ் தாஸ்குப்தா இன்று காலை 6 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.