முட்டையை தலையை சுற்றி உடைப்பது சகல தோஷ நிவர்த்தி: ஜோதிடர் நெல்லை வசந்தன்!

முட்டையில் நவக்கிரகங்களும் அடங்கி உள்ளதால் அதை தலையை சுற்றி உடைத்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்று ஜோதிடர் நெல்லை வசந்தன் கூறி உள்ளார்.

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதை கூறியதாக மற்றொரு ஜோதிடர் சிவ காளீஸ்வரன் கூறியுள்ளார். இதற்கு நெல்லை வசந்தன் கூறும் காரணங்கள் பின் வருமாறு:-

சர்வ தோச நிவர்த்திக்காக நாம் பயன்படுத்தக்கூடிய பொருள் முட்டையாகும்.

நவக்கிரங்களில் முட்டையை குறிப்பது சூரியனும் செவ்வாயாகும். முட்டையின் ஓடு சனியையும் சூரியனையும் குறிக்கும் .

முட்டையில் உள்ள நீர் சந்திரனையும், வெள்ளைக்கரு சுக்கிரனையும் குறிக்கும். மஞ்சள்கரு குருவை குறிக்கும்.

இதை தலா மூன்று முறை தலையில் வலது மற்றும் இடது புறம் சுற்றும் போது ராகுவும் கேதுவும் வருகின்றது.

உங்களுக்கு அதிகமான பாதிப்புகள் இருக்கும்போது இந்த அடிப்படை தத்துவத்தை உடைய முட்டையை புதன்கிழமை அன்று தலையை சுற்றி உடைத்தால் சகல தோஷமும் நீங்கும் என்று கூறியுள்ளார்.