குரு பெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும்?

நவக்கிரகங்களில் முழு சுபர் என்ற பெயர் குருவுக்கு உண்டு. இந்த குரு பகவான், வாக்கிய பஞ்சாங்கப்படி, இதுவரை இருந்து வந்த விருச்சிக ராசியில் இருந்து, இன்று தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார்.

இது குறித்து, முன்னணி ஜோதிடர்கள் சிலர் கூறிய தகவல்கள்:-

குருவின் ஆட்சி மற்றும் மூலத்திரிகோண வீடான தனுசுக்கு குரு பகவான் செல்வது அவருக்கு பலம்தான்.

ஆனாலும், ஏற்கனவே தனுசு ராசியில் இருக்கும் சனி மற்றும் கேதுவுடன் அவர் இணையும்போது எந்த அளவுக்கு பலன் தருவார் என்பதயும் யோசிக்க வேண்டி உள்ளது.

குரு பகவான் குழந்தை, யானை, தங்கம், ஆன்மிகம், மஞ்சள் நிறம், கடலை வகைகள் உள்ளிட்ட பலவற்றுக்கு காரகத்துவம் பெற்றவர்.

குரு சனியுடன் சேரும்போது சண்டாள யோகமாக மாறிவிடும். கூடவே கேது இருப்பதால், அந்த யோகத்தின் தன்மை இன்னும் அதிகமாகும்.

அனைத்து துறைகளிலும், குறிப்பாக ஆன்மிகத்தில் நல்ல பெயர்களுடன் உள்ளவர்கள் அவதூறுக்கு ஆளாக நேரலாம். யானைகளுக்கு பாதிப்பு வரலாம்.

ஏற்கனவே நாட்டில் நிதி நெருக்கடி இருப்பதால், இந்த நெருக்கடி இன்னும் அதிகமாகலாம் அல்லது தீரலாம்.

குருவும் சனியும் சேரும்போது, அது நிலம் உள்ளிட்ட ஆவணங்களில் உள்ள சிக்கலை குறிக்கும்.

வீடுகள், மனைகள் வாங்குபவர்கள், அதற்காக ஆவணங்களை வங்கியில் அடமானம் வைப்பதையும் குறிக்கும்.

குரு சனியுடன் கேதுவும் இருப்பதால், நிலம், வீடுமனை சம்பந்தப்பட்ட புதிய சட்ட திட்டங்கள் நாட்டில் நடைமுறைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் நிர்வாக இயல் படிப்புகளான  எம்.பி.ஏ போன்றவற்றில் புதிய மாற்றங்கள், புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் ஆக வாய்ப்புகள் உண்டு.

தனுசில் இருக்கும் குரு, சனி மற்றும் கேதுவின் இணைவில் இருந்து அகலும்போதுதான் அதன் உண்மையான பலன்கள் கிடைக்க வழி வகை ஏற்படும்.

குறைந்த பட்சம் குரு – சனி, குரு – கேது இடையிலான, பாகைகள் அதிகமானால் கூட அதன் பலன்கள் தெளிவாக கிடைக்கும்.

அதுவரை, குரு பெயர்ச்சியின் முழுமையான பலன்கள் பெரிதாக கிடக்க வாய்ப்பில்லை என்றே முன்னணி ஜோதிடர்கள் கூறுகின்றனர்.