விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி!

இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வருகின்றனர்.புதுச்சேரி காமராஜ் நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜான் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

காமராஜ் நகரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார், தம்மை எதித்து போட்டியிட்ட என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை விட 7 ஆயிரத்து 171 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஜான்குமாருக்கு மொத்தம்  14 ஆயிரத்து 782 வாக்குகளும், புவனேஸ்வரனுக்கு   7 ஆயிரத்து 611 வாக்குகளும் கிடைத்துள்ளன.