விக்கிரவாண்டி – நாங்குநேரி இடைத்தேர்தல்: அதிமுக அமோக வெற்றி!

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு நடந்த இதைத்தேர்தலில், இரண்டு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில், திமுக வேட்பாளர் புகழேந்தியை தோற்கடித்தார்.

அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன்  1 லட்சத்து 13 ஆயிரத்து 428 வாக்குகளைப் பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி 68 ஆயிரத்து 646 வாக்குகள் பெற்றார்.

இந்த தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி 2 ஆயிரத்து 913 வாக்குகளைப் பெற்றார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், தம்மை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 32 ஆயிரத்து 333 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு 94 ஆயிரத்து 562  வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரூபி மனோகரனுக்கு  62 ஆயிரத்து 229  வாக்குகள் கிடைத்தன.

நாம் தமிழர் கட்சியின் ராஜநாராயணன் 2 ஆயிரத்து 662 வாக்குகளைப் பெற்றார்.

இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து, சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது.